உங்கள் வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டும் சனிபகவான் !!
🌟 நாம் செய்த வினையின் பலனை எவ்விதமான வேறுபாடின்றி அளிக்கும் நீதிமான் சனிபகவான் ஆவார். நிதானமான செயல்பாடுகளையும், சிந்தித்து செயல்படும் திறமையும் அளிக்கக்கூடியவர். இன வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான நீதியை அளிக்கக்கூடியவர். இனி இவர் பனிரெண்டு ராசிகளில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :
🌟 தந்தை : சூரிய தேவர்
🌟 தாய் : சாயா தேவி
🌟 உகந்த நாள் : சனிக்கிழமை
🌟 சனி பிரதி அதிபதி : எமதர்மராஜன்
🌟 சனி மனைவி : நீலாதேவி
🌟 வசிக்கும் இடம் : அசுத்தமான இடங்கள் (கழிவு நீர் பாதை, கழிவுகள் நிறைந்த இடம்)
🌟 வலிமை உடைய பொழுது : இரவில் வலிமை உடையவர்
🌟 ராசியை கடக்கும் காலம் : 21/2 ஆண்டுகள்
🌟 சனி நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன், இராகு, கேது
🌟 சனி பகை கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்
🌟 சனி சமமான கிரகம் : குரு
🌟 சனி தசா காலங்கள் : 19 வருடங்கள்
🌟 சனி நட்சத்திரம் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி
சனியின் குணங்கள் :
நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே மிகவும் குறைந்த வேகத்திலும், நிதானமான செயல்பாடுகளை உடையவர். ஆனால், இவர் அளிக்கும் பலனானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருக்கும். வாழ்க்கையின் மறுபக்கம் என்பதனை பற்றி தெளிவாக நமக்கு விளங்க வைக்கும் வல்லமை உடையவர். சனிபகவானின் பார்வை நாம் செய்த கர்ம பலன்களை அளிக்கக்கூடியது.
🌟 இனி வரும் நாட்களில் சனி ஒவ்வொரு ராசியில் இருந்தால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் காண்போம்.
மேஷ ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுக்கு, சனிபகவான் பகை என்னும் உறவில் நின்று நீச்சம் என்ற நிலையில் அமைவதால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
🌟 மந்தமான செயல்பாடுகளும், அலட்சியமான குணங்களையும் உடையவர்கள்.
🌟 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 எதிலும் சிந்தித்து செயல்படும் குணம் என்பது குறைவு.
🌟 தன்னம்பிக்கை குறைவாக உடையவர்கள்.
🌟 காலதாமதமான மற்றும் அவசர முடிவுகளால் இவர்களே இன்னல்களை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.
🌟 சந்தேக எண்ணங்கள் உடையவர்கள்.
🌟 பிறரை எளிதில் நம்பமாட்டார்கள். நம்பினால் அவர்கள் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எதிலும் முழுமையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.
🌟 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.
🌟 மற்றவர்கள் அடையும் இன்னல்களால் மகிழ்ச்சி காணக்கூடியவர்கள்.
🌟 எப்போதும் ஏதாவது சங்கடமான நிகழ்வுகளை நினைத்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.
🌟 தாழ்வு மனப்பான்மையால் எவரிடமும் இணையாமல் தனித்தே இருப்பவர்கள்.
🌟 மற்றவர்களின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கக்கூடியவர்கள். தானாக எதையும் செய்யமாட்டார்கள்.
🌟 சந்தேக எண்ணங்களும், விபரீத கற்பனையும் உடையவர்கள்.
🌟 அலட்சியமான செயல்பாடுகளால் நிலையான தொழில் இன்றி அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.
🌟 தவறான வழிகளில் பொருள் ஈட்டும் எண்ணம் உடையவர்கள். ஈட்டிய பொருளை முறையற்ற வழிகள் மூலம் அழித்துவிடக்கூடியவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக