டெல்லியில் சமூக வலைதளங்களில் பெண்களின் போட்டோக்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் சமூக
வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் சிலருக்கு ஆசாமி ஒரிவர் சம்பந்தபட்ட பெண்களின்
ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் அக்கவுண்டை
ஹேக் செய்து அதில் இந்த ஆபாச படங்களை பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் போலீஸாருக்கு
தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் சைபர் க்ரைம் தடுப்பு பிரிவு மூலம்
ட்ரேஸ் செய்து சுமித் ஜா என்ற 26 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரணையில்
பேஸ்புக், இன்ஸ்டாவில் உள்ள பெண்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை நிர்வாணமாக
மார்பிங் செய்து அவற்றை அந்த பெண்களுக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக அந்த
இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சுமார் 100க்கும் அதிகமான பெண்களிடம் இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்த
நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக