Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 31 டிசம்பர், 2020

வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!

வந்துவிட்டன IRCTC App மற்றும் புதிய வலைத்தளம்: இப்ப ticket புக் செய்வது இன்னும் easy ஆனது!!

 மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (டிசம்பர் 31, 2020) IRCTC-ன் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார்.

IRCT-யின் மேம்படுத்தப்பட்ட மின்-டிக்கெட் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி பயனருக்கு ஏதுவான பல அம்சங்களுடன் வருகிறது. இது ஜனவரி 1 முதல் செயல்படும்.

-புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட IRCTC வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மேம்பட்ட பயனர் அனுபவத்திற்காக பெரிதாக்கப்பட்ட சேவைகளுடன் வருகிறது.

-ஒரே பக்கத்தில் காலியாக இருக்கும் அனைத்து வகுப்பு இருக்கைகள் மற்றும் அவை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றிய தகவல்களை அளிக்கும் மேம்படுத்தப்பட்ட பயனர் உதவி அம்சங்கள்.

-சேமிக்கப்பட்ட பயணிகள் விவரங்களுக்கான ப்ரெடிக்டிவ் எண்ட்ரி.

-ஒரே கிளிக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் ரயிலின் முன்பதிவை நீங்கள் தொடங்கலாம்.

பியுஷ் கோயல் (Piyush Goel) டிசம்பர் 25 அன்று IRCTC ஈ-டிக்கெட்டிங் இணையதளத்தில் பயணிகளின் முன்பதிவு எளிதாக்குவதற்கான அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Eticketing முறைக்கு மேம்படுத்தப்படுவதை கோயல் மதிப்பாய்வு செய்தார். பயணிகளின் ரயில் பயணத்திற்கு முழுமையான வசதியை E-ticketing வலைத்தளம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கூறியிருந்தார். மேம்பட்ட அம்சங்கள் மற்றும் எளிய வடிவமைப்போடு, பயனர்களின் தனிப்பயனாக்கம் மற்றும் அவர்களின் eticketing வலைத்தளத்தின் வசதிகளை மேம்படுத்த ரயில்வே செயல்படுகிறது.

இந்திய ரயில்வேயின் (Indian Railways) IRCTC டிக்கெட் வலைத்தளம், இந்தியன் ரயில்வேயில் இயங்கும் ரயில்களில் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது. பெரும்பாலான மக்களின் ரயில் பயணத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

டிக்கெட் முன்பதிவு செய்வதிலும், பயண வசதிகளிலும் பொது அனுபவத்தை மேம்படுத்துவதற்கு 2014 முதல் புதிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

இந்தியன் ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளுடனான முதன் தொடர்பு புள்ளியாக IRCTC உள்ளது. ஆகையால் அந்த அனுபவம் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கோயல் கூறினார்.

புதிய டிஜிட்டல் இந்தியா (Digital India) செயல்பாட்டின் கீழ், முன்பதிவு கவுண்டர்களுக்குச் செல்வதை விட அதிகமான மக்கள் இப்போது டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வதையே விரும்புகின்றனர். எனவே IRCTC வலைத்தளம் தொடர்ந்து தன்னை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகிறது. இதற்கிடையில், RB, CRIS மற்றும் IRCTC அதிகாரிகள் கோயலுக்கு வலைத்தளத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

இந்தியன் ரயில்வே தொடர்ந்து பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், இந்தியன் ரயில்வே சார்பாக, ரயில் நிலையங்களில் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கான சிறப்பு வசதி ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி பல ரயில் நிலையங்களில் வரவிருக்கும் நாட்களில் விரிவுபடுத்தப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே வழங்கிய தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்காத வருவாய் ஆலோசனைகள் திட்டத்தின் (NINFRIS) கொள்கையின் கீழ் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக