ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடலுடன் ஒன்பிளஸ் 9 லைட் மாடலும் அறிமுகமாகுமா... அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்... இதோ முழு விவரங்கள்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 9 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் 9 லைட் அல்லது 9இ மாடலும் அறிமுகமாகும் என்கிற தகவலை தொடர்ந்து, கூறப்படும் லைட் மாடலின் விலை மற்றும் வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஒன்பிளஸ் 9 தொடரின் கீழ் இந்த முறை மூன்று மாடல்கள் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், புதிதாக வெளியாகியுள்ள ஒரு அறிக்கையானது,அது ஒன்பிளஸ் 9இ என்று அளிக்கப்படாது, அது ஒன்பிளஸ் 9 லைட் என்று அழைக்கப்படலாம் என்று பரிந்துரைக்கிறது
மேலும் அது லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படவில்லை என்றும் அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 9 தொடரில் ஒன்பிளஸ் 9 லைட் மூன்றாவது மாடலாக இருக்கும் என்று ஆண்ட்ராய்டு
சென்ட்ரல் வலைத்தளம் தனக்கு கிடைத்த ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது.
வதந்திக்கப்படும் இந்த ஒன்பிளஸ் 9 லைட் மாடல் ஆனது லேட்டஸ்ட் குவால்காம்
ஸ்னாப்டிராகன் 888 SoC-க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மூலம்
இயக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிள்ளது.
இருப்பினும், ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்கள் குவால்காமின் லேட்டஸ்ட்
பிளாக்ஷிப் SoC உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 9 தொடரின் மற்ற இரண்டு மாடல்களை விட மூன்றாவது ‘லைட்’ வேரியண்ட்டை
மிகவும் ஆக்ரோஷமாக விலை நிர்ணயம் செய்யலாம் என்றும் இது அறிவுறுத்துகிறது.
மூன்று மாடல்களை அறிமுகப்படுத்துவதின் மூலம், ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் கூடுதலான
கிளைகளை உருவாக்கி நுகர்வோருக்கு கூடுதல் விருப்பங்களை வழங்கும் மூலோபாயத்தை
பின்பற்றுவதாக தெரிகிறது.
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 9 'லைட்' ஸ்மார்ட்போன் ஆனது இந்திய
மதிப்பின்படி தோராயமாக ரூ.44,100 க்கு அறிமுகமாஃலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 9
ஸ்மார்ட்போன் ஆனது ரூ.51,500 முதல் ரூ.58,800-க்குள் எங்காவது ஒரு புள்ளியை
எட்டலாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, மூன்றாவது மாடல் பற்றி ஒன்பிளஸிலிருந்து இதுவரை எந்த
உறுதிப்பாடும் வெளியாகவில்லை. எனவே மேற்கண்ட அனைத்து தகவல்களையும் சிட்டிகை
உப்பில் இருந்து கிள்ளிகொள்ளும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு
பரிந்துரைக்கிறோம். ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போன்கள் வருகிற 2021 ஆம் ஆண்டின்
முதல் காலாண்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
முன்னதாக வெளியான ஒரு லீக்ஸ் தகவல் வழியாக, ஒன்பிளஸ் 9 மாடலின் கேமரா அமைப்பு
பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியானது.
ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் கேமராக்கள் லைக்கா லென்ஸை கொண்டிருக்கும் என்கிற தகவல்
வெளியான சில நாட்களில், ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் மெயின் கேமரா 50 மெகாபிக்சல்
அல்ட்ரா விஷன் வைட்-ஆங்கிள் கேமராவாக இருக்கும் என்கிற தகவல் வெளியானது.
மேலும் அதன் ட்ரிபிள் கேமரா அமைப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும்
அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் அடங்கும்.
முதலில் கிஸ்மோசீனாவால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் விரிவான
கேமரா விவரக்குறிப்புகள் ஸ்லாஷ் லீக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதன்படி, ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆனது எஃப் / 1.9 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல்
மெயின் கேமரா + எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 20 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சினி
கேமரா + ஆட்டோஃபோகஸ் மற்றும் எஃப் / 3.4 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ
கேமரா ஆகியவைகளை கொண்டிருக்கும்.
இதுவொரு பக்கமிருக்க, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 33W சார்ஜர் TUV ரைன்லேண்ட்
சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது எதிர்காலத்தில்
அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக