கடந்த ஆண்டின் கால் இறுதியில் 5ஜி இணைப்பு தொழில்நுட்பத்துடன் அறிமுகமான ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இனிதாய் துவங்கியுள்ள இந்த 2021 ஆம் ஆண்டில் அடுத்து அறிமுகமாகும் பல ஸ்மார்ட்போன் சாதனங்களில் 5ஜி இணைப்பு அம்சம் இருப்பதை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள். உலகளவில் 5ஜி அம்சத்தை இப்போதே சில முன்னணி நாடுகள் பயன்படுத்தி வருகிறது.
11 மில்லியன் 5G பயனர்கள்
சமீபத்தில் வெளியான நவம்பர் மாத இறுதி அறிக்கையின் முடிவுகள் படி, 5ஜி வயர்லெஸ் நெட்வொர்க்குகளில் கிட்டத்தட்ட 11 மில்லியன் பயனர்களைக் கொண்ட நாடாக தெற்கு கொரியா உருமாறியுள்ளது. அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொகுத்த தரவுகளின்படி, கடந்த மாதம் நாட்டில் 10.9 மில்லியன் 5 ஜி பயனர்கள் இருந்தனர், இது மொத்த 70.5 மில்லியன் மொபைல் சந்தாக்களில் 15.5 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய 5 ஜி போன்களின் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மூலம் அதிவேக நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் தொழில்நுட்ப அம்சத்தை உலகம் முழுதும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்த முதல் ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்கிறது. புதிய 5 ஜி போன்களின் அறிமுகங்களுக்கு மத்தியில் அதிவேக நெட்வொர்க்குகளுக்கான சந்தாக்கள் முந்தைய மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 1 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அறிக்கை முடிவுகள் குறிப்பிட்டுள்ளது.
20 மடங்கு அதிவேக நெட்வொர்க்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5G சேவையை வணிகமயமாக்கிய முதல் நாடாகத் தென் கொரியா இருந்தது, அதன் பின்னர் நெட்வொர்க்குகளை பரவலாக ஏற்றுக்கொள்வதற்குத் தீவிரமாக முயன்று வருகிறது, இது கோட்பாட்டில் 4G LTE நெட்வொர்க்கை விட 20 மடங்கு அதிவேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நாட்டின் 5 ஜி நெட்வொர்க்குகள் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும்போது இன்னும் பின்தங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5G எப்போது கிடைக்கும்?
காரணம் சராசரியாக 5 ஜி பதிவிறக்க வேகம் வினாடிக்கு 690.47 மெகாபைட் (எம்.பி.பி.எஸ்) எட்டியுள்ளது, இது தற்போதைய 4 ஜி எல்டிஇ வேகத்தை விட நான்கு மடங்கு மட்டுமே வேகமாக உள்ளதால், இது அசல் 5ஜி நெட்வொர்க்கின் முழுமையான அதிவேக இணைப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரம் மற்றும் வேகத்தை அதிகரிக்க உள்ளூர் மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்தியாவில் 2021ம் ஆண்டில் 5ஜி சேவை துவங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக