மூங்கில் ஃபிரேமால் உருவாக்கப்பட்ட இ-சைக்கிள் ஒன்று விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த இ-சைக்கிளின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவலை இப்பிதிவில் காணலாம்.
அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் லைட்ஸ்பீட் மொபிலிட்டி நிறுவனம் இ-சைக்கிள் உற்பத்தி சார்ந்து இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், மின் மற்றும் பெடல் செய்து இயக்கக்கூடிய மொபட் ரகத்திலான வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையிலேயே பேம்பூச்சி எனும் புதுமுக இ-சைக்கிளை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த இ-சைக்கிளின் ஃபிரம் முழுக்க முழுக்க மூங்கிலைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் இப்பைக்கிற்கு பேம்பூச்சி என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. மூங்கிலின் ஆங்கில பெயரே பேம்பூ. அலுமினியத்திற்கு பதிலாக மூங்கில் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த சைக்கிள் மேலும் இலகு ரக வாகனமாக மாறியிருக்கின்றது.
அலுமினியத்திற்கு பதிலாக மூங்கில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இச்சைக்கிளின் உறுதி தன்மையை லேசானதாக எடைப் போட்டுவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கின்றது. ஏனெனில் இதன் உறுதி தன்மைக்காக பல்வேறு வேலைகளை அது செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகையால், உலோகத்தைவிட இது வலிமையானதாக இருக்கும் என கூறப்படுகின்றது.
ஆர்டரின் பேரிலேயே இந்த பேம்பூச்சி இ-சைக்கிளை லைட்ஸ்பீடு மொபிலிட்டி நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துடன், ஆர்டர் கொடுப்போரின் உடல் எடை அளிவிடப்பட்டு அவருக்கேற்ப வலிமையான மூங்கில் கொண்டே இ-சைக்கிள் தயாரிக்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்பன் ஃபைபர் ஃபிரேமிலும் இச்சைக்கிளை நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இ-சைக்கிளில் மின்சார திறனுக்காக லித்தியம்-அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். இச்சைக்கிளின் ஒட்டுமொத்த எடையுமை 15 கிலோ மட்டுமே ஆகும். இதன் எடை வேண்டுமானாலும் குறைவாக இருக்கலாம், ஆனால், இதன் விலை மிக அதிகம் ஆகும்.
ஆமாங்க இச்சைக்கிளுக்கு ரூ. 1.5 லட்சம் என்ற விலையை தயாரிப்பு நிறுவனம் லைட் ஸ்பீடு மொபிலிட்டி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத்தின் வழக்கமான ஸ்மார்ட் சைக்கிள்கள் ரூ. 13 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மூங்கிலால் உருவாக்கப்பட்ட புதிய இ-சைக்கிளை இது அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபோன்று மூங்கிலால் உருவாக்கப்பட்ட சைக்கிள் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக இந்நிறுவனம் தயாரித்த அனைத்து சைக்கிள்களுமே அலுமினிய ஃபிரேமால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்து.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக