Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 ஜனவரி, 2021

மாயச்சதுரம்.. எந்தப்பக்கம் இருந்து கூட்டினாலும் விடை 15 வரவேண்டும்.. சிந்தியுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!

---------------------------------------------

தொண்டன் 1 : எதற்காக நம்ம தலைவருக்கு வைக்கோல் மாலை போடுறாங்க?

தொண்டன் 2 : கட்சிக்காக மாடா உழைச்சாராம்.. அதான்.

தொண்டன் 1 : 😛😛

---------------------------------------------

பாபு : கால் உடைஞ்ச உங்க தாத்தாவை, ஏன் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகாம, ஜோசியர்கிட்ட அழைச்சிட்டு போறீங்க?

கோபு : அந்த ஜோசியர் நடக்கப்போறதை சொல்வாருன்னு சொன்னாங்க.. அதான்.

பாபு : 😉😉

---------------------------------------------

மாயச்சதுரம்...!

---------------------------------------------

இந்த சதுரத்தில் மேலிருந்து கீழ், வலமிருந்து இடம் என எந்தப்பக்கம் இருந்து கூட்டினாலும் விடை 15 வரவேண்டும். 

விடை கீழே...👇👇

---------------------------------------------

இந்த பழமொழியை சீர்படுத்துங்கள்...!!

---------------------------------------------

முன்னே மூத்தோர் முதுநெல்லிக்காயும் பின்னர் இனிக்கும் சொல்லும் கசக்கும் 

முழுகிக் முக்காலும் கொக்காகுமா காகம் குளித்தாலும்

ஆயிரம் பொன் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் யானை 

கட்ட மாட்டான் மாட்டயும் வந்த தேட மாட்டான் வராத மாட்டயும்

வைத்த வளத்த பிள்ளை சோறு போடும் பிள்ளை சோறுபோடாவிடிலும்

விடை :

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னர் இனிக்கும்.

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.

வந்த மாட்டயும் கட்ட மாட்டான், வராத மாட்டயும் தேட மாட்டான்.

வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும், வைத்த பிள்ளை சோறு போடும்.

---------------------------------------------

ஓரெழுத்து ஒருமொழி...!!

---------------------------------------------

பூ - மலர், அழகு, தாமரை, பூமி, இடம்

பே - மேகம், நுரை, அழகு

பை - பாம்புப் படம், பசுமை, உறை

போ - செல்

மா - மாமரம், பெரிய, விலங்கு, அம்மா

---------------------------------------------

மாய சதுரத்திற்கான விடை :

---------------------------------------------

816357492

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக