🌟 கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதனுடன் சனிபகவான் நட்பு என்ற நிலையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம் :
🌟 சுயநலமும், பொதுநலமும் கலந்த குணம் கொண்டவர்கள்.
🌟 பல திறமைகள் இருந்தாலும் எதுவும் தெரியாதது போல் இருக்கக்கூடியவர்கள்.
🌟 பல துறைகள் பற்றிய அறிவு உடையவர்கள்.
🌟 புகழுக்கு மயங்கக்கூடியவர்கள்.
🌟 எதிர்ப்புகளை மறைமுகமான முறையில் கையாண்டு சமாளிக்கும் திறமை உடையவர்கள்.
🌟 எதையும் மறக்காதவர்கள். அது உதவியானாலும், பகையானாலும் சரி.
🌟 தனது வலி மற்றும் மன வேதனைகளை வெளிப்படுத்தாதவர்கள்.
🌟 நித்திரையில் வல்லவர்கள்.
🌟 அறுசுவை உணவை ரசித்து ருசித்து உண்ணக்கூடியவர்கள். அதனாலேயே சில நேரங்களில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இவர்களுக்கு ஏற்படும்.
🌟 மறைமுகமான எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உடையவர்கள்.
🌟 தனக்கு காரியம் முடிய வேண்டுமாயின் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கக்கூடியவர்கள்.
🌟 அவ்வளவு எளிதில் எங்கும் எதிலும் உடனடியான முடிவுகளையோ அல்லது முதலீடுகளையோ செய்ய மாட்டார்கள். எச்சரிக்கை குணம் மிகுந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக