தற்சமயம் வெளிவந்த தகவலின்படி லாவா நிறுவனம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி புதிய லாவா இசட்1 ஸ்மார்ட்போன் மாடலை விற்பனை கொண்டுவர உள்ளது. அண்மையில் தான் இந்நிறுவனம் Z-series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
குறிப்பாக லாவா Z1, லாவா Z2, லாவா Z4, லாவா Z6, உள்ளிட்ட பெயர்களில் தான் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மேலும் இந்த லாவா இசட்1 ஸ்மார்ட்போன் மாடல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அமேசான் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும் லாவா இசட்1 ஸ்மார்ட்போன்.
இந்த புதிய ஸ்மார்ட்போன்களுடன் லாவா BeFIT எனப்படும் ஸ்மார்ட் பேண்ட் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு, இதய துடிப்பு போன்றவற்றை அளவிட முடியும். குறிப்பாக லாவா BeFIT ஸ்மார்ட் பேண்ட் விலை ரூ.2,699-ஆக உள்ளது.2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா Z1 மாடலின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா Z2 மாடலின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட லாவா Z4 மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட லாவா Z6 மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.
லாவா இசட்1 ஸ்மார்ட்போன் ஆனது 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 480×854 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். லாவா இசட்1 ஸ்மார்ட்போனில் 3100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
லாவா இசட்1 ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 5எம்பி ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். பின்பு
ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா இசட்1 ஸ்மார்ட்போன். குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி. போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக