Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 ஜனவரி, 2021

கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...

 கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!

உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான கோகோ கோலா புதிய வர்த்தக விரிவாக்கத் திட்டமாகக் காஃபி பிரியர்களை ஈர்க்கும் திட்டத்துடன், தனது ஆஸ்தான கோகோ கோலா குளிர்பானத்தைப் புதிதாகக் காஃபி சுவையில் குளிர்பானத்தை உருவாக்கியுள்ளது.

கோகோ கோலா உலகில் சில நாடுகளில் காஃபி, டீ ஆகியவற்றை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது குளிர்பானத்தைக் காஃபி சுவையில் தயாரித்துப் புதிய வர்த்தகப் பிரிவையும், புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்க தயாராகியுள்ளது. இந்த வர்த்தகத்தைப் படிப்படியாக உலகம் முழுவதிலும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கோகோ கோலா இப்புதிய காஃபி சுவை கொண்ட புதிய கோகோ கோலா குளிர்பானத்தை அமெரிக்காவில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குளிர்பானம் அலுமினியம் கேனில் மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. 12 அவுன்ஸ் கொண்ட கேனில் 69ML கபைன் கொண்டுள்ளது இந்தக் குளிர்பானம்.

கோகோ கோலா உடன் பிரேலியன் காஃபி கலந்து சுமார் 3 சுவைகளில் இந்தக் குளிர்பானம் உருவாக்கப்பட்டு உள்ளது. டிராக் பிலென்டு, வெண்ணிலா, காரேமெல் என மூன்று சுவையிலும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கென பிரத்தியேகமாக டிராக் பிலென்டு, வெண்ணிலா சுவைகளில் கூடுதலாக Zero Sugar அதாவது சர்க்கரை இல்லாத குளிர்பானத்தையும் தயாரித்து விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.

2.32 டாலர் விலையில் விற்கப்படும் இந்தப் புதிய குளிர்பான கோகோ கோலா நிறுவனம் வால்மார்ட் மற்றும் டிரோன்அப் நிறுவன கூட்டணியில் விற்பனை செய்கிறது. மேலும் ஜார்ஜியாவில் இப்புதிய குளிர்பானத்தை டிரோன் மூலம் டெலிவரி செய்து வருகிறது.

அமெரிக்கச் சந்தையில் தொடர்ந்து புதிய வகைக் குளிர்பானத்தை அறிமுகம் செய்து வரும் கோகோ கோலா, இந்த முறை காஃபி சுவையில் கோகோ கோலாவை அறிமுகம் செய்துள்ளது.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக