வோடபோன் ஐடியா (வி) நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும்.
அண்மையில் இந்நிறுவனம் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதியை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது ரூ.2,595 ப்ரீபெய்ட் திட்டத்தில் போனஸ் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. அதன்படி இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது 50ஜிபி போனஸ் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா (வி) ரூ.2,595 திட்டத்தில் தினசரி 2டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இப்போது இந்த திட்டத்தில் 50ஜிபி போனஸ் டேட்டா நன்மை கிடைக்கிறது. எனவே மொத்தமாக இந்த திட்டதில் 780ஜிபி டேட்டா நன்மையை பயனர்கள் பெற முடியும்.
வோடபோன் ஐடியா (வி) ரூ.2,595 திட்டத்தில் பயனர்கள் ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியத்தின் ஓவர்-தி-டாப் (OTT) நன்மையையும் பெறுகிறார்கள். பின்பு Vi மூவிகள் மற்றும் டிவி கிளாசிக் இலவச அணுகல் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த திட்டமும் ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வி நிறுவனம் அதன் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக இது ஜனவரி 17 வரை அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதாவது வி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டேட்டா ரோல்ஓவர் வசதியை தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக அறிமுகம் செய்தது. இது தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதிக்கு நகர்த்த அனுமதிக்கும் ஒரு வசதியாகும்.
வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரின் புதுப்பிக்கப்பட்ட கால அளவை அதிகாரப்பூர்வ VI இணையதளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பிரிவில் காணமுடியும். அதன்படி இந்த விளம்பர சலுகை அக்டோபர் 19, 2020 முதல் ஏப்ரல் 17, 2021 வரை பொருந்தும் என வி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி ஆனது ரூ.249, ரூ.299, ரூ.399, ரூ.449, ரூ.595, ரூ.599, ரூ.699, ரூ.795, மற்றும் ரூ.2,595 திட்டங்களில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டேட்டா ரோல்ஓவர் வசதி வாரஇறுதி நாட்களில் பயன்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகை பலன்களில் மாற்றம், திரும்ப பெறுவது போன்றவற்றை டிராய் விதிமுறைகளுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளப்படலாம் என வி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக