Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 ஜனவரி, 2021

இந்த வழியில் உங்களுக்கு வருமானம் வந்தாலும் GST பதிவு அவசியம்: விவரம் உள்ளே

 இந்த வழியில் உங்களுக்கு வருமானம் வந்தாலும் GST பதிவு அவசியம்: விவரம் உள்ளே

மற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானங்களைப் போலவே, சமூக ஊடக தளங்களிலிருந்து பெறப்படும் வருமானமும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின் கீழ் வரும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

GST Registration: COVID-19-க்கு பிந்தைய காலத்தில் சமூக ஊடகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே YouTube, Facebook, Twitter போன்ற தளங்களின் மூலம் பணம் ஈட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் நிகர மதிப்பை நன்றாக அதிகரித்துள்ளார்கள்.

இருப்பினும், மற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானங்களைப் போலவே, சமூக ஊடக தளங்களிலிருந்து பெறப்படும் வருமானமும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின் கீழ் வரும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வரி (Tax) மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, சமூக ஊடக தளங்கள் மூலம் ஒரு நபருக்கு நிகர வருடாந்திர வருவாய் ஆண்டுக்கு ரூ .20 லட்சம் அல்லது அதற்கு மேல் வந்தால், அவர்கள் கண்டிப்பாக GST பதிவு பெறுவது கட்டாயமாகும்.

YouTube, Facebook, Twitter மற்றும் பிறவற்றிலிருந்து வரும் வருமானம்

YouTube, Facebook, Twitter அல்லது வேறு எந்த சமூக ஊடக தளங்களிலிருந்தும் ஒருவரின் வருமானத்தில் பொருந்தக்கூடிய GST பதிவு விதி குறித்து பேசிய செபியால் அங்கீகரிக்கப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் மணிகரன் சிங்கல், “ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ .20 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கிறார் என்றால், அவரது பெயர் அல்லது சம்பாதிக்கும் நபருக்கு சொந்தமான அமைப்புக்கு GST பதிவு பெறுவது கட்டாயமாகிறது." என்றார்.

வருமானத்தில் GST கணக்கீடு

GST பதிவிற்குப் பிறகு GST எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றி கூறுகையில், வெல்த் மேனேஜ்மெண்ட் மற்றும் ட்ரான்செண்ட் கன்சல்டன்ட்ஸின் இயக்குனர் கார்திக் ஜாவேரி, “நீங்கள் GST பதிவு செய்தால், GST அறிக்கையை தாக்கல் செய்யும் கடமையோடு உங்களுக்கு மற்றொரு பணியும் உள்ளது. உங்கள் சமூக ஊடக (Social Media) சேவைகளை சப்ஸ்க்ரைப் செய்யும் சந்தாதாரர்களிடமும் நீங்கள் பணம் வசூலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் சந்தாதாரரிடமிருந்து நீங்கள் ரூ .100 வசூலித்தால், அதற்கு 18 சதவீத GST-யைக் கூட்டினால், சேவை வழங்குநரால் இதற்காக உருவாக்கப்படும் வவுச்சர் ரூ .118 (ரூ. 100 + ரூ .18) என இருக்கும்” என்று கூறினார்.

GST வசூலிக்கப்படாவிட்டால் வருமானத்தில் GST கணக்கீடு

ஜாவேரி மேலும் கூறுகையில் "ஒருவர் வாடிக்கையாளரிடம் GST வசூலிக்கவில்லை என்றால் ரூ .18 –ஐ அவர் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கையில் அவரது சமூக ஊடக வருமானம் ரூ .82 (ரூ. 100 - ரூ .18) ஆக குறையும்.  GST பதிவுக்குப் பிறகு GST வருமானத்தை (Income) தாக்கல் செய்யும் போது அதை மனதில் கொள்ள வேண்டும்.  

இது எங்கு பொருந்தும்

இந்த ரூ .20 லட்சம் ஆண்டு வருவாய் மற்ற சேவைத் துறை வருமானத்திற்கும் பொருந்தும் என்று சிங்கல் கூறினார். எனவே, எந்தவொரு சேவையையும் வழங்கும் ஒருவர் ரூ .20 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கிறார் என்றால், அந்த வருமானம் ஈட்டும் நபருக்கும் GST பதிவு பெறுவது கட்டாயமாகும்.

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக