🌟 விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் பகவானுடன் ராகு, பகை என்ற போதும் விருச்சக ராசியில் ராகு உச்சம் அடைகின்றார். உச்சம் அடைந்த ராகு செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
🌟 பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை நடுங்க வைக்கக்கூடியவர்கள்.
🌟 தனது எண்ணம் போல் தனது வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
🌟 எந்த நிலையிலும் தனது முடிவுகளையோ, பேச்சுக்களையோ மாற்றாதவர்கள்.
🌟 எதையும் மறக்காதவர்கள். அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி.
🌟 தன்னைப் பற்றி விளம்பரம் செய்வதில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 மறைமுக சக்திகள் பற்றிய ஞானமும், சிந்தனைகளையும் உடையவர்கள்.
🌟 எதிலும் எளிமை உடையவர்கள்.
🌟 தன்னால் இயலாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.
🌟 கற்பனை திறன் மிகுந்தவர்கள்.
🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.
🌟 எதிலும் திருப்தி என்பது இல்லாமல் புதியதை தேடக்கூடியவர்கள்.
🌟 இன வேறுபாடுகளை விரும்பாதவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக