Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 ஜனவரி, 2021

தொலைக்காட்சியும், மனைவியும் ஒன்றுதான்... எப்படி?🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

-----------------------------------------------------------------

மனைவி : ஏங்க தினமும் எவ்வளவு ரூபாய்க்கு குடிப்பீங்க?

கணவன் : ஒரு 200 ரூபாய்க்கு குடிப்பேன்.

மனைவி : எப்பத்திலிருந்து குடிக்கிறீங்க?

கணவன் : நான் 20 வயதிலிருந்தே குடிக்கிறேன்.

மனைவி : இப்ப உங்களுக்கு 50 வயது ஆகுது.

கணவன் : அது எனக்கே தெரியும், நீ என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்றது.

மனைவி : 200X30=6000X12=72000 ஒரு வருஷத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் என்றால் 30 வருஷத்திற்கு 30X72000=2160000. இப்படி குடிச்சியே அழிச்சதற்கு ஒரு பிஎம்டபிள்யூ காரே வாங்கியிருக்கலாமே.

கணவன் : ஆமா நீ குடிப்பியா?

மனைவி : என்னங்க இது கேள்வி... உங்களுக்கு தெரியாதா?

கணவன் : சரி உங்கள் அப்பா, அம்மா, தம்பி குடிப்பாங்களா?

மனைவி : எங்கள் அம்மா, அப்பா, நான், என் தம்பி யாருமே குடிக்க மாட்டோம்.

கணவன் : அப்ப உங்கள் வீட்ல இருக்க வேண்டிய 4 பிஎம்டபிள்யூ கார் எங்க?

மனைவி : 😳😳

-----------------------------------------------------------------

இது எப்படி இருக்கு?

-----------------------------------------------------------------

தொலைக்காட்சியும், மனைவியும் ஒன்றுதான்... எப்படி?

அவங்க பேசுவாங்க... நாம பாக்கலாம்... கேட்கலாம்.

ஆனா... திரும்ப பேச முடியாது...

-----------------------------------------------------------------

சிரிக்க மட்டுமே...! 

-----------------------------------------------------------------

 

ஒரு மாணவன் ஆங்கில வாத்தியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டான்..

 

சார் 'நடுரே"-னா என்னது? 

 

அப்புறம் சொல்றேன் என சமாளித்து டிக்சனரியில்.. தேடி தேடி ஓய்ந்து போனார்.. 

 

அவனைக் கண்டால் காணாதது போல் இருந்தார்...

 

இருந்தாலும் அந்த மாணவன் அவரை விடாமல் தொலைத்து எடுத்தான்...

 

சொல்லுங்க சார்?

 

வாத்தியார் அவனிடம் சரி ஸ்பெல்லிங் சொல்லு என்றார்..

 

அவன் Nature என்று சொல்ல கடுப்பாகி போன சார், ஏன்டா நேச்சர்-னு சொல்லாமல் என்ன சாவடிச்சியா நீ... உன்ன ஸ்கூல விட்டே அனுப்புறேன் இரு என கத்தினார்...

 

உடனே சார் காலில் விழுந்து அழுதான்...

 

சார்... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க என் புடுரே (Future) வீணாயிடும்...😆😆😀😀

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக