சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ72 மற்றும் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்சமயம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.
வெளிவந்த தகவலின்படி 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52 (4ஜி) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.37,700-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ52 (4ஜி) மாடல் ரூ.38,000-விலையிலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேலக்ஸி ஏ52 (5ஜி) மாடல்கள் ரூ.40,700 மற்றும் ரூ.45,100-விலைகளில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.39,800-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடல் ரூ.45,100-விலையில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ52 டிஸ்பிளே
கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்பான். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 750ஜி
சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேலக்ஸி ஏ52 கேமரா
கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் பினபுறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி ஏ72 டிஸ்பிளே
கேலக்ஸி ஏ72 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டிஸபிளே வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.
கேலக்ஸி ஏ72 கேமரா
கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக