வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த நிலையில் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற மாற்று ஆப்களை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதிலும் இந்தியாவில் டெலிகிராம் செயலியை மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.
இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில் டெலிகிராம் செயலி ஆனது பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அண்மையில் டெலிகிராம் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க கஸ்டம் வால்பேப்பர் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர் ஆதரவை ஆப்பில் சேர்த்தது.
தற்சமயம் டெலிகிராம் செயலி ஆனது அதன் வெர்ஷன் 7.4இல் ஒரு புதிய டூல்-ஐ சேர்த்துள்ளது. இந்த டூல் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராம் ஆப்பிற்கு எளிதாக நகர்த்த உதவுகிறது.
அண்மையில் Macerkopf தளம் வெளியிட்ட தகவலின்படி, டெலிகிராம் v7.4 இப்போது iOS பயனர்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக வெளிவருகிறது. இந்த அப்டேட் ஒரு புதிய இம்போர்ட் அம்சத்தை கொண்டுவருகிறது. இது பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை - வாட்ஸ்அப், லைன் மற்றும் KakaoTalk உள்ளிட்ட பிற பயன்பாடுகளிலிருந்து - டெலிகிராமிற்கு மாற்ற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைச் செயல்படுத்தும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்
வழிமுறை-1
அதாவது உங்களது சாட் ஹிஸ்டிரியை வாட்ஸ்அப்-ல் இருந்து டெலிகிராமிற்கு மாற்ற, முதலில் நீங்கள் வாட்ஸ்அப் செயலியை திறந்து நீங்கள் Migrate செய்ய விரும்பும் சாட்டிற்குள் செல்ல வேண்டும். அடுத்து நீங்கள் சாட்டில் More மெனுவைத் திறந்து Export Chat என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். இப்போது வாட்ஸ்அப்-ல் குறிப்பிட்ட முழு சாட்டின் பேக்-அப்பும் ஒரு ZIP File வடிவில் உருவாக்கும்
வழிமுறை-2
அதன்பின்னர் ZIP File-ஐ டெலிகிராமில் ஐஒஎஸ் Share Sheet வழியாக இம்போர்ட் செய்ய முடியும். நீங்கள் இவ்வாறு செய்தால், அந்த சாட்-ஐ நீங்கள் எந்த காண்டாக்ட் அல்லது க்ரூப் உடன் இணைக்க விரும்புகிறீர்கள் என்று டெலிகிராம் உங்களிடம் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்க.
வழிமுறை-3
பின்னர் குறிப்பட்ட மெசேஜ்கள் உங்களுக்கும் உங்கள் காண்டாக்ட்டிற்கும் Sync செய்யப்படும். அடுத்து எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளும் வேறு சேவையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க லேபிள் செய்யப்படும்.
வழிமுறை-4
இந்த டெலிகிராம் செயலி ஆனது புதிய Migration Tool-ஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட பயனர்கள் ஆப்பின் சமீபத்திய பதிப்பில் இதை அணுக முடிகிறது
வழிமுறை-5
மேலும் இந்த புதிய அம்சத்தை முயற்சி செய்ய விரும்பும் பயனர்கள், ஆப் ஸ்டோரிலிருந்து சமீபத்திய அப்டேட்-ஐ பதிவிறக்கலாம். பின்பு வரவிருக்கு வாரங்களில் டெலிகிராம் நிறுவனம் இந்த அம்சத்தினை இன்னும் பரவலாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது வரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக