
கூகிள் நிறுவனம் தற்பொழுது அதன் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் புதிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது. கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை பலரும் அதன் ஆங்கில வெர்ஷனில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இனி நிலைமை அப்படி இல்லை, நீங்கள் தமிழில் கூகிள் மேப்ஸ் வரைபடங்களைக் காண வேண்டும் என்றாலும் கூட அது சாத்தியமே.
10 இந்திய மொழிகளில் இப்போது கூகிள் மேப்ஸ்
இந்த புதிய மாற்றம் கூகிள் மேப்ஸ் பயனர்களைத் தமிழ் மொழி உட்பட 10 இந்திய மொழிகளில் இப்போது கூகிள் மேப்ஸ் வரைபடத்தில் உள்ள இடங்களின் தகவல்களை ட்ரான்ஸ்லேட் செய்ய அனுமதிக்கிறது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சொந்த மொழியில் கூகிள் மேப்ஸ்
கூகிள் மேப்ஸ் அண்மையில் அதன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேட் அம்சத்தைப் புதுப்பித்து மேம்படுத்தியுள்ளது. இந்தியர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டை எளிதாகப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி ஆங்கிலம் தெரியாத இந்தியர்கள் அவர்களின் சொந்த மொழியில் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும்.
எளிய மொழி அனுபவம்
இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு எளிய மொழி அனுபவத்தை வழங்கும், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் சொந்த மொழியில் கேள்விகளை வெளியிடுவதற்கும், உணவகங்கள், பெட்ரோல் பம்புகள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், வங்கிகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையம் போன்ற வரைபடங்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய இது உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்த-எந்த 10 மொழிகள் இப்போது கூகிள் மேப்ஸில் கிடைக்கிறது
POI (points of interest) இன் லத்தீன் ஸ்கிரிப்ட் (ஆங்கிலம்) பெயரிலிருந்து ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேட் அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இனி பயனர்கள் கூகிள் மேப்ஸ் வரைபடங்களை இப்போது தமிழ், இந்தி, பங்களா, மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக