
இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், இணையத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.
அதன்படி தற்போது ஒரு கரடியின் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின்படி அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் சைரியா என்பவர் வசித்து வருகிறார்
மேலும் இவருடைய இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து செய்துள்ள அனைத்து சேட்டைகளும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சைரியா வீட்டினுள் புகுந்த கரடி ஒனறு வீட்டில் உள்ள வளாகத்தில் வலம் வந்துள்ளது. இதனை சைரியா கவனித்துள்ளார்
அதன்பின்பு கரடியின் போக்கை சைரியா ஆராய்ந்துள்ளார். வளாகத்தில் இருந்து வீட்டின் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான நீர் தொட்டியை அந்த கரடி அடைந்தது.
பின்னர் அந்த நீர்த் தொட்டியை கரடி சுற்றி சுற்றி வந்திருந்தது. அடுத்து சிறுது நேரத்தில் அந்த தொட்டியை பார்த்ததும் கரடிக்கு ஏதோ தோன்றியது போலவே அந்த தொட்டிக்குள் பதமாக அந்த கரடி இறங்கியது.
தொட்டிக்குள் இறங்கியதுமே முதலில் நீரை ஆசைதீர பருகியது, பின்னர் அந்த தொட்டிக்குள் அப்படியே சிறுது நேரம் விளையாடத் துவங்கியது. தற்சமயம் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக