Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 23 ஜனவரி, 2021

நிமிடத்தில் நிலைமை மாறும்... இது எப்படி இருக்கு? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------

காமெடி கலாட்டா...!

-------------------------------------

 

கோபி : மாப்பிள்ளைக்கு ரொம்ப குசும்பு...

ரமேஷ் : ஏன்.. என்னாச்சு?

கோபி : அறுபதாம் கல்யாணத்துலயும் அதே பொண்ணுக்குத்தான் தாலி கட்டணுமானு கேக்கறாரு!

ரமேஷ் : 😫😫

-------------------------------------

மேனேஜர் : வேலை கேட்டு அனுப்புற விண்ணப்பத்துல சிகரெட் புடிக்கிற போட்டோவை ஏன் ஒட்டியிருக்கீங்க?

வந்தவர் : நீங்கதானே புகைப்படம் வேணும்னு கேட்டிருந்தீங்க...

மேனேஜர் : 😐😐

-------------------------------------

ஏன் தெரியுமா?

-------------------------------------

 

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்...

 

பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்...

 

ஏன் தெரியுமா? 🤔

 

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்...

 

ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்க முடியாது....! 

-------------------------------------

மாயச்சதுரம்...!!

-------------------------------------

 

இச்சதுரத்தில் மேலிருந்து கீழாக படித்தாலும், இடமிருந்து வலமாக படித்தாலும் ஒரே சொற்கள் வரவேண்டும்... எப்படி?

 

த___ச___மி

விடை கீழே...👇👇

இது எப்படி இருக்கு?

வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு முதலில் தண்ணீர் கொடுப்பதுதான் பண்பாடு...

 

ஆனால், இப்ப  Wifi Password கொடுப்பதே சிறந்த பண்பாடு.

-------------------------------------

நிமிடத்தில் நிலைமை மாறும்...!! 

-------------------------------------

 

👣 நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்...

 

👣 ஒன்று முன்னால் என்றால் மற்றொன்று பின்னால்...

 

👣 ஆனால் முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை...

 

👣 பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை...

 

👣 அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று...

விடை :

தரகு

ரசம்

கும்மி

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!