Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 ஜனவரி, 2021

நகரத்தின் பெருமை... குவிந்த பாராட்டுகள்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

---------------------------------------------

நகரம் ஒன்றின்... ரயில் நிலையம் அருகில் ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர். ஆனால் அவர்களுடன் இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது.

 

ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை...

 

காரணம்.. அது எந்த முறையில்... எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. (உதாரணத்திற்கு, தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்... இதைப்போல...) 

 

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர். அனைவரும் முயற்சி செய்து ஒரு வழியாக ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர். அவருக்கு 60 மொழிகள் வரை அத்துப்படி. அவர் ஒரு புரஃபெஸரும் கூட... 

 

அவரும் வந்து வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை. அந்த நாய்க்கும் ஒன்றும் புரியவே இல்லை. கடைசியில் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில் அவர் பயிற்சியை துவக்கியதும், நாய்க்கு புரிய ஆரம்பித்தது... அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு, உடனே கைது செய்தது போலீஸ்.

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுகள் குவிந்தது. அவருக்கு அந்நாட்டு அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது. பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது. விருந்தில் அவரிடம் கேட்கப்பட்டது உங்களால் இந்நகரம் பெருமை அடைந்தது... அதனால் உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள் வழங்கப்படும் என்றனர்... 

 

பணம் வேண்டுமா...? 

 

விலை கூடிய கார்கள் வேண்டுமா..? 

 

மாளிகை வேண்டுமா...? 

 

அரசாங்க பணிகள் வேண்டுமா...? 

 

அவர் அனைத்தையும் மறுத்துவிட்டு, எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அந்த நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள் என்றார்... 

 

அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம்... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்... 

 

ஒரு அதிகாரி கேட்டார்... அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். 

 

அதற்கு அவர்... சொன்னார்... 

 

இந்த நாயை என் வீட்டிற்கு கொண்டு போய்... என் மனைவி முன் நிறுத்த வேண்டும்... ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு பல மொழிகளை படிக்க முயலும்போதெல்லாம்... 

 

அவள் சொல்வாள்... 

 

'எந்த நாய் கேட்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."... 

 

அதுக்காக தான் இதை கொண்டு போகணும்னு சொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..

---------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்...!!

---------------------------------------------

 

மலிர்தல் - பெருகுதல்.

 

நாய்கன் - வணிகன், தலைவன்.

 

தீமொழி - பொல்லாச் சொல்.

 

தருநன் - கொடுப்பவன்.

 

சுவாசக்குத்து - ஒருவகை மூச்சு நோய்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!