வியாழன், 28 ஜனவரி, 2021

கூடையில் என்ன பழம்? மணி எத்தனை? இரண்டிற்கும் ஒரே பதில்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

---------------------------------------------------

பாபு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

கோபு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க.

பாபு : 😄😄

---------------------------------------------------

ராமு : எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா...

சோமு : உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலையே...

ராமு : உன் கூடப் பொறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.

சோமு : 😏😏

---------------------------------------------------

வாழ்வை உயர்த்தும் உன்னதங்கள்...!!

---------------------------------------------------

பிழைக்க விரும்பினால் உழைக்க விரும்பு...

இரை தேடு.. இறையையும் தேடு...

நிறைகளை பேசு... நிறையப் பேசு...

கேட்பவரிடம் சொல்... சொல்பவரிடம் கேள்...

பெரியோரை வணங்கு... சிறியோரை வாழ்த்து...

இவையே வாழ்வை உயர்த்தும் உன்னதங்கள்...

---------------------------------------------------

விடுகதைகள்...!!

---------------------------------------------------

1. காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? 

2. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன். நான் யார்? 

3. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? 

4. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? 

விடை :

1. மரம், கரி, நெருப்பு

2. மணிக்கூடு 

3. ஈசல்

4. கல்வி

---------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

---------------------------------------------------

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள் :

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தை செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

---------------------------------------------------

மூளைக்கு வேலை...!!

---------------------------------------------------

ஒருவர் கூடையில் என்ன பழம்? என்று கேட்டார்,

மற்றொருவர் மணி எத்தனை? என்று கேட்டார்....

இவை இரண்டிற்கும் ஒரே பதில். அது என்ன?

விடை :

🍊ஆரஞ்சு🕖

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்