திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிட்டு 50 நாட்களுக்கு பின்னர் மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் 15 நாட்களுக்குள்ளாக இன்று ஒடிடியில் வெளியாகி உள்ளது. பொதுவாக திரையில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பின்தான் ஒடிடியில் வெளியாகும். ஆனால், தற்போது மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு படங்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஒடிடி தளத்தில் வெளியாகி வருவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்ற கோணத்தில் ஆலோசனை கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடைபெற்றது.
அனைத்து படங்களுமே திரையில் வெளியிடப்பட்டு 50 நாட்களுக்குப் பின்னர் மட்டுமே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளும் தயாரிப்பாளர்களின் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியிடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தின் மூன்றாவது வார வசூலை திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பங்கிட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தயாரிப்பாளருக்கு பங்கு தரப்படமாட்டாது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிய பட்ஜெட் திரைப்படங்களை திரையில் வெளியிட்டு 30 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை , பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக