சமீப காலங்களில் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். காரணம், தங்கள் பிரைவஸி கொள்கைகளை வாட்ஸ்அப் மாற்றி அமைத்தது. அந்த பிரைவஸி கொள்கைகள் மூலம், ஒருவர் மற்றொருவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பும் தகவல்களை பார்க்க முடியும் என்று நிலை உருவாக்கப்பட்டது. இது தனிப்பட்ட ஒரு வாட்ஸ்அப் பயனரின் பிரைவஸியை பாதிக்கும் வகையில் இருக்கிறது என்று சர்ச்சை வெடித்தது. இதனால் பலர் வாட்ஸ்அப் செயலியை அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ போன்ற மாற்று செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
பின்னர், தங்கள் புதிய பிரைவஸி கொள்கைகளை கைவிட்டது வாட்ஸ்அப். இப்போதைக்கு எந்த மாற்றமும் பிரைவஸி பாலிசியில் செய்யப்படாது என்றும் உத்தரவாதம் கொடுத்தது. இந்நிலையில் இழந்த தன் பெயரை மீட்டுருவாக்கம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் ஒரு புதிய அப்டேட்டை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. வாட்ஸ்அப்பை, டெஸ்க்டாப்புகளில் பயன்படுத்த விரும்புவோர், கியூ.ஆர் கோட் மூலம் அதைச் செய்ய முடியும். இனி, விரல் ரேகை அல்லது ஃபேஸ் ஐடி ஒப்புதலுக்குப் பின்னர் தான், டெஸ்டாப் லாக்-இன் செய்ய முடியும் என்கிற நிலையை வாட்ஸ்அப் உருவாக்க உள்ளது. இதன் மூலம் ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கை, இன்னொருவர் பார்ப்பதைத் தவிர்க்க முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் சொல்கிறது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக