>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 9 ஜனவரி, 2021

    பிஎஃப் பணத்தை எடுக்கணும்னா இதெல்லாம் தெரியணும்!

     


    பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முன்பாக அதிலுள்ள விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.



    பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ஈபிஎஃப் அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இது எளிமைப்படுத்தப்பட்டு மொபைல் போன் மற்றும் ஆன்லைன் மூலமாகவே பிஎஃப் பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதுmo5 சதவீதம் அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் சலுகைகளுக்குச் சமமான தொகையை நீங்கள் எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் பிஎஃப் பணத்தை அதிகப்பேர் எடுத்து வருகின்றனர்.


    பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு முன்பாக இதெல்லாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.


    1. வீடு வாங்கவோ வீடு கட்டவோ பிஎஃப் பணத்தை எடுக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவது, திருமணச் செலவு, மருத்துவச் செலவு போன்றவற்றுக்கும் எடுக்கலாம்.


    2. ஆன்லைன் மூலமாக பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு வாடிக்கையாளர் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் யுனிவர்சல் கணக்கு எண்ணை ஆக்டிவேட் செய்ய முடியும்.


    3. யுனிவர்சல் கணக்கு எண் சம்பந்தப்பட்டவரின் ஆதார், பான், வங்கி எண்களுடன் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


    4. வாடிக்கையாளர்கள் EPFO போர்ட்டல் மூலமாக பிஎஃப் தொகையை கிளைம் செய்ய முடியும். இந்தக் கோரிக்கை அவர்களுக்கு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.


    5. பிஎஃப் பணத்தை உடனடியாக எடுத்தால் அது பலன் தராது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது ஓய்வு பெறுவதற்கு முன்பாக பணியில் இருக்கும்போது எடுத்தால் அதில் பயன் இல்லை.


    6. பிஎஃப் பணத்தை எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படும். அதாவது, பணியில் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்யாமல் பிஎஃப் பணத்தை எடுத்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும். எனினும், வேலை பறிபோவது மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது


     


     குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்



    , ,

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக