Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 ஜனவரி, 2021

EPF Update: புதிய விதிமுறையின் கீழ் உங்கள் Take Home Salary அதிகரிக்கும்..!


PF Contribution: தொழிலாளர் நல அமைச்சகத்தின் (Labour Ministry) பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உங்கள் கைக்கு வரும் சம்பளம் (Take Home Salary)அதிகரிக்கும், ஆனால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் குறையக்கூடும். புதிய ஊதிய விதி முறைகளுக்கு பிறகு, ஊழியர்களின் கைக்கு வரும் சம்பளம் குறையும் ஆனால் கிராச்சுட்டி மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், கைக்கும் வரும் சம்பளம் குறையக் கூடாது என நினைக்கும் ஊழியர்களுக்கு இந்த செய்தி நிம்மதியை அளிக்கும். புதிய ஊதிய விதிகள் ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வரக்கூடும்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் (EPF) ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரின் பங்களிப்பை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்க தொழிலாளர் அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால் ஊழியர்களின் கைக்கு வரும் சம்பளம் அதிகரிக்கும். ஆனால் பி.எஃப் (PF) பங்களிப்பு குறைந்தால், ஓய்வூதியத் தொகையும் குறையும்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கைக்கு வரும் சம்பளம் (Take Home Salary ) 2021 ஏப்ரல் முதல் குறையக்கூடும், ஏனெனில் புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களின் சம்பள கட்டமைப்பை நிறுவனங்கள் மாற்ற வேண்டியிருக்கும். புதிய ஊதிய விதிகளின்படி, அதாவது ஏப்ரல் 2021 முதல், ஊழியரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50% அல்லது அதை விட அதிகமாக இருக்க வேண்டும்

பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது ஒரு ஊழியரின் சம்பளத்தின் 50% க்கும் குறைவான அளைல் கொடுப்பனவில் வராத தொகை உள்ளது. இதனால் நிறுவனங்களின் ஈபிஎஃப் மற்றும் கிராச்சுட்டி பங்கு வெகுவாக குறையும். நிறுவனங்களின் நிதி சுமையை குறைக்க இவ்வாறு நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து கொடுக்கின்றன. ஆனால் புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பின்னர், நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். இதனால் ஊழியர்களின் கைக்கு வரும் சம்பளம் குறையும் என்றாலும், பி.எஃப் பங்களிப்பு மற்றும் கிராச்சுட்டி பங்களிப்பு அதிகரிக்கும். மேலும், ஊழியரின் வரிச்சுமையும் குறையும், ஏனென்றால் நிறுவனம் ஊழியருக்கான பி.எஃப் பங்களிப்பை அதன்  Cost-To-Company  (CTC) என்ற வகையில் சேரும்.

ஆனால் தொழிலாளர் அமைச்சகம் பாராளுமன்றக் குழுவிற்கு மற்றொரு ஆலோசனையை வழங்கியுள்ளது, தொழிலாளர் அமைச்சகம் EPFO ​​போன்ற ஓய்வூதிய நிதிகளை மேலும் எளிமையாக்க தற்போதுள்ள கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்று கூறுகிறது. ' 'Defined benefits' அதாவது வரையறுக்கப்பட்ட நன்மைகள் என்பதற்கு பதிலாக, 'Defined contributions' அதாவது 'வரையறுக்கப்பட்ட பங்களிப்புகள்' என்ற முறை செயல்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இப்போது EPFO ​​ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் 'வரையறுக்கப்பட்ட நன்மைகள்'  என்ற வகையாகும். இந்த வரையறுக்கப்பட்ட பங்களிப்பு முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பங்களிப்புக்கு ஏற்ப நன்மைகளைப் பெறுவார்கள், அதாவது அதிக பங்களிப்பு அதிக நன்மை என்ற வகையில் இருக்கும்.

புதிய ஊதிய விதிகள் தொடர்பான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், கைக்கு வரும் சம்பளம் அதிகமாக இருக்க வேண்டும் என்றூ நினைக்கும் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், இது குறித்து இதுவரை இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

 

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக