எஸ்எம்எஸ், இமெயில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதள தகவல் பரிமாற்ற வசதிகள் பயன்பாட்டில் உள்ளது. இதன்காரணமாக தந்தி என்ற சேவை கேள்விபட்ட ஒன்றாகவே மாறிவிட்டது என கூறலாம். 1837ல் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் எப். பி மோர்ஸ் என்பவர் தந்தி சேவையை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இந்த சேவை 1850 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் தந்தி கொல்கத்தாவின் கிழக்கு நகரத்தில் இருந்து தெற்க்கு பகுதியில் உள்ள டைமெண்ட் கார்பர் என்னும் இடத்திற்க்கு அனுப்பப்பட்டது.
டெலகிராம் செயலி
காலப்போக்கில் தந்தி சேவை என்ற சொல் மறைந்தாலும் அதை நினைவுப்படுத்தும் விதமாக டெலிகிராம் என்ற பெயரில் சேட்டிங் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. பாதுகாப்பான சேட்டிங் வேண்டும் என்பவர்கள் தேர்வு செய்வது டெலகிராம் செயலியைத்தான். உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் ரகசியமான தகவல்களை பயமின்றி சேட்டிங் செய்யலாம்.
ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ்
டெலிகிராம் செயலி 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவை சேர்ந்த பவல் துரவ் என்பரவால் உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக ஐஓஎஸ் பயனர்களுக்கும் அடுத்த சில மாதங்களில் ஐஓஸ் பயனர்களுக்கும் உருவாக்கப்பட்டது. இந்த செயலி தகவல் பரிமாற்றம், வீடியோ தொடர்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டவை.
1.5 ஜிபி வரை அளவுள்ள வீடியோவை பகிரலாம்
டெலிகிராம் செயலியில் 1.5 ஜிபி வரை அளவுள்ள வீடியோக்களை பரிமாறிக் கொள்ளலாம். சமீபத்தில் அமேசானின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோசின் வாட்ஸ்அப் கணக்கை சவுதி இளவரசர் ஹேக் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஜெஃப் பெசோஸ் டெலிகிராம் கணக்கை பயன்படுத்தியிருந்தால் ஹேக் செய்திருக்க முடியாது எனவும் வாட்ஸ்அப் கணக்கு எளிதாக ஹேக் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் டெலிகிராம் நிறுவனம் பவல் துரவ் தெரிவித்தார்.
டெலிகிராம் ஒரு இந்திய செயலி என தகவல்
சில காலக்கட்டங்களுக்கு முன்பு டெலிகிராம் ஒரு இந்திய செயலி எனவும் அதை இந்தியனாய் இருந்தால் பயன்படுத்தும்படியும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பரவின என்பது கவனிக்கத்தக்க ஒன்று. டெலிகிராம் செயலி உருவாக்கியவர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் பாதுகாப்பு அம்சம்
டெலிகிராம் செயலியில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக டெலிகிராம் பாஸ்போர்ட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பயனர் ஒருவரின் தனிப்பட்ட அடையாள ஆவணங்களை டெலிகிராம் கிளவுட்டில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
அதிகரிக்கும் பயனர்கள்
டெலிகிராம் செயலியில் தற்போது பயனர்கள் அதிகரித்து வண்ணம் உள்ளனர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் சமூகவலைதள பயன்பாடு அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் அதிகமான ஆக்டிவ் மன்த்லி யூஸர்களை டெலிகிராம் பெற்றது என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக