பி.எஸ்.என்.எல் தனது நீண்டகால
ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.1,999 (பி.வி 1,999) மற்றும் ரூ.2,399 (பி.வி 2,399)
ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் வரவிருக்கும் 72 வது குடியரசு தினம் மற்றும் பொங்கல்
பண்டிகையை முன்னிட்டு பி.வி 1,999 இன் செல்லுபடியை அதிகரித்துள்ளது. பி.வி 1,999
வழக்கமாக 365 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது, ஆனால் இப்போது கூடுதலாக 21 நாட்கள்
என்கிற செல்லுபடி சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலம் 386 நாட்களாக
மாறியுள்ளது.
மறுபுறம், பி.வி 2,399 ஒரு மோசமான திருத்தம் மற்றும் பல அட்டகாசமான திருத்தங்களைப்
பெறுகிறது, முக்கியமான திருத்தம் என்னவென்றால், இதன் செல்லுபடியாகும் காலம் 600
நாட்களில் இருந்து 365 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆகமொத்தம், ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக, பி.வி 2,399 திட்டத்தின்
செல்லுபடியாகும் காலம் 72 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுகையில் ரூ.2399
திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பி.வி 1,999 திட்டத்தின் அசல் செல்லுபடியாகும்
காலத்துடன் (365 நாட்கள்) ஒற்றுப்போகிறது.
ரூ.2,399 திட்டத்தின் நன்மைகள்:
பி.எஸ்.என்.எல் நிறுவனம் பி.வி 2,399 திட்டத்தின் செல்லுபடியை குறைத்த கையோடு அது
வழங்கும் சலுகைகளையும் "நல்ல முறையில்" திருத்தி உள்ளது. தற்போது இந்த
திட்டம் எந்தவொரு FUP வரம்பும் இல்லாமல் இந்தியாவிலுள்ள எந்த நெட்வொர்க்குக்கும்
வரம்பற்ற குரல் அழைப்பை வழங்கும். முன்னதாக,
பிஎஸ்என்எல் குரல் அழைப்புகளை ஒரு நாளைக்கு 250
நிமிடங்களுக்கு கட்டுப்படுத்தியது.
மும்பை மற்றும் டெல்லி தொலைதொடர்பு வட்டங்களில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க்கிற்கு
கூட வரம்பற்ற குரல் அழைப்புகள் செய்யப்படலாம்.
மேலும், பி.வி 2,399 இப்போது வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது, ஆனால் ஒரு நாளைக்கு 3
ஜிபி என்கிற வரம்புடன் வருகிறது. குறிப்பிட்ட வரம்பை அடைந்த பிறகு இணைய வேகம் 80
கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். தவிர இந்த திட்டத்தின் பயனர்கள் ஒரு நாளைக்கு 100
இலவச எஸ்.எம்.எஸ்களையும் பெறுவார்கள்.
பொதுவான நன்மைகளை தவிர்த்து, பி.எஸ்.என்.எல் பி.வி 2,399 ஆனது இலவச ஈரோஸ் நவ்
சந்தா மற்றும் வரம்பற்ற தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோன் நன்மைகளையும்
வழங்குகிறது. ஈரோஸ் நவ் சந்தா திட்டத்தின் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு
செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க.
இது ஒரு விளம்பர சலுகை மற்றும் ஜனவரி 10 முதல் 2021 ஜனவரி 31 வரை மட்டுமே
செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க. பிப்ரவரி 1 முதல் பி.வி ரூ.2,399
திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.1,999 திட்டத்தின் நன்மைகள்:
பி.வி 1,999 திட்டத்தை பொறுத்தவரை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் இதன் செல்லுபடியை 21
நாட்கள் நீட்டித்துள்ளது, இது ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலத்தை 386 நாட்களாக
மாற்றுகிறது.
நன்மைகளை பொறுத்தவரை, பி.வி 1,999 ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டா, எந்தவொரு
நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள்,
வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், இரண்டு
மாதங்களுக்கு லோக்தூன் கன்டென்ட் மற்றும் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் இலவச சந்தா
ஆகியவற்றை வழங்குகிறது.
லோக்தூன் கன்டென்ட் செல்லுபடியானது ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் மட்டுமே
இருக்கும். இந்த விளம்பர சலுகை ஜனவரி 10 முதல் அணுக கிடைக்கும் மற்றும் ஜனவரி 31
ஆம் தேதியுடன் முடிவடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக