ஒரு காலகட்டத்தில் பில்லியனராக வலம் வந்தவர், இன்று பெரும் கடனாளியாக வலம் வந்து கொண்டுள்ளார். ஒரு புறம் அண்ணன் முகேஷ் அம்பானியோ ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், மறுபுறம் தம்பி அனில் அம்பானியோ கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றார்.
இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், நிதி சேவைகளை செய்து வந்தது, குறிப்பாக இன்சூரன்ஸ், ஹோம் பைனான்ஸ், காமாடிட்டி புரோக்கிங், மேனேஜ்மென்ட் சர்வீசஸ், பைனான்ஷியல் ப்ராக்ட்ஸ், சொத்து மேலாண்மை, முதலீடு என பலவற்றையும் செய்து வந்தது.
ஆனால் இன்றே பலத்த கடன் பிரச்சனைகளுக்கும் மத்தியில் இருந்து வருகின்றது.
பெரும் கடன் பிரச்சனை
இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஏற்கனவே அனில் அம்பானியின் பல நிறுவனங்கள் கடன் பிரச்சனையில் இருந்து வரும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 2020 நிலவரப்படி, 20,379.71 கோடி ரூபாய் கடனில் இருந்து வருகிறது.
கடன் & வட்டி
இந்த நிறுவனத்தின் கடன் பிரச்சனையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19,805.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன், வட்டி விகிதங்கள் என மொத்தம் டிசம்பர் மாதத்தில் 20,379.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிலையன்ஸ் கேப்பிட்டல், பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எந்த வங்கியில் எவ்வளவு கடன்?
இதில் ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டில் 523.98 கோடி ரூபாயும், இதே ஆக்ஸிஸ் வங்கியில் 100.63 கோடி ரூபாயும் அசல் தொகையாக செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த கடன்கள் 700.76 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது டிசம்பர் 31 நிலவரப்படி வட்டியுடன் சேர்த்து என்றும் கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம்
இதே ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கும் நிலுவையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் குறுகிய கால மற்றும் நீண்டகால கடன், வட்டி விகிதம் 12,943.18 கோடி ரூபாயும் சேர்த்து இருக்கும் என்று இந்த நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக