இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவையை கொண்டு வருவதற்கான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எஸ் விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கானப் பணிகளை வேகமாகச் செய்ய வேண்டும் எனப் பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ள நிலையில் முக்கியமான திட்டத்தை நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது.
பிஎஸ்என்எல் மற்றும் டிசிஎஸ் கூட்டணியில் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் 4ஜி நெட்வொர்க் அமைக்கப்பட உள்ளது.
4ஜி சேவை
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா கடந்த வாரம் மக்களவையில் இந்திய மக்களுக்கு 4ஜி டெலிகாம் சேவையை அளிப்பதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல்
4G நெட்வொர்க் அளிக்கப் பிஎஸ்என்எல் நாட்டின் முக்கியமான பகுதிகளில் முதற்கட்டமாக 6,000 டவர்களையும் நிறுவ முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 1.06 லட்ச டெலிகாம் டவர்களை அடுத்தடுத்து நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
டிசிஎஸ்
இந்நிலையில் இந்த முதல் 6000 4ஜி டெலிகாம் டவர்களை அமைக்கும் 550 கோடி ரூபாய் திட்டத்தை டிசிஎஸ் தலைமையிலான நிறுவனங்கள் அடங்கிய குழு கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
6000 4ஜி டெலிகாம் டவர்கள்
இந்த ஒப்பந்தம் குறித்து டிசிஎஸ் நிர்வாகம் எவ்விதமான அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அறிமுகத் திட்டம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆதிக்கம்
4ஜி சேவையில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த உள்ள நிலையில், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகியவை கட்டணத்தைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆதிக்கத்தையும் வர்த்தகத்தையும் உடைக்கப் பிஎஸ்என்எல் களத்தில் இறங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக