மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா நடவடிக்கை பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை, இ-கல்வி என தொடங்கி பெரும்பாலானோர் கையில் இணைய சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு வந்துவிட்டது.
தொடர்ந்து இதன் முன்னேற்ற நடவடிக்கையாக 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பட்ஜெட் இல்லாமல் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு டிஜிட்டல் முறை மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
டிஜிட்டல் முறையிலான பல்வேறு முக்கிய அறிவிப்பு
அதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் எனவும் கூடுதலாக 200 கல்விச் சேனல்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் எனவும் இது வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.
அதேபோல் கிசான் ட்ரோன்கள் பயன்பாடு கொண்டுவரப்பட்டு விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் எனவும் 5ஜி தொழில்நுட்பத்துக்கான ஏலம் நடப்பு ஆண்டில் நடத்தப்படும் எனவும் 2023 ஆம் ஆண்டுக்குல் 5ஜி தொழில்நுட்பம் கிடைக்கச் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்,
அறிமுகம் செய்யப்படும் இ-பாஸ்போர்ட்
அதில், குறிப்பிடத்தக்க இரண்டு விஷயங்கள் என்று பார்க்கையில், அதில் ஒன்று, டிஜிட்டல் கரன்சி நேரடியாக ரிசர்வ் வங்கி மூலம் கொண்டுவரப்படும் எனவும் இது பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். மற்றொன்று வரும் நிதியாண்டில் இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
அதன்படி 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். இ-பாஸ்போர்ட் வழங்கும் அரசு திட்டம் குறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் முரளீதரன் மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தித்தளத்தில் வெளியான தகவல்களை பார்க்கலாம், இ-பாஸ்போர்ட் என்பது ஒருங்கிணைந்த காகிதத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
ரேடியோ அதிர்வெண் அடையாள சிப்
இந்த அட்டையில் உள் இடம்பெற்றிருக்கும் ரேடியோ அதிர்வெண் அடையாள சிப் மற்றும் அது அண்டெனாவுடன் இணைக்கப்பட்ட வகையில் இருக்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டார். இந்த இ-பாஸ்போர்ட்களை தயாரிக்கும் பொறுப்பை தேசிய தகவல் மையத்திடம் வெளியுறவு அமைச்சகம் ஒப்படைத்திருக்கிறது. அதேபோல் இந்த இ-பாஸ்போர்ட் ஆனது நாசிக் பகுதியில் இருக்கும் இந்திய பிரஸ் மூலம் தயாரிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.
அத்தியாவசிய தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படும்
எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் எலெக்ட்ரானிக் சிப்-ல் அத்தியாவசிய தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படும் என முரளீதரன் தெரிவித்தார். அதேபோல் ஆவணம் மற்றும் சிப் தன்மையானது சர்வதேச சிவில் அமைப்பு ஆவணம் 9303 மூலம் விவரிக்கப்பட்டிருக்கின்றன என குறிப்பிட்டார். மேலும் இ-பாஸ்போர்ட் மாதிரி ஆனது சோதனையில் இருப்பதாகவும் முழு அளவிலான உற்பத்தி மற்றும் விநியோகம் உள்கட்டமைப்புடன் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த ஆண்டு முதல் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டம்
இந்தியா தனது குடிமக்களுக்கு இந்த ஆண்டு முதல் இ-பாஸ்போர்ட் வழங்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இ-பாஸ்போர்ட்டில் ஆர்எஃப்ஐடி சிப் மற்றும் ஆண்டெனா உடன் உட்பொறுத்தப்பட்டிருக்கும். 2022-23 ஆம் ஆண்டில் இருந்து தனது குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு காலாண்டர் ஆண்டில் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் முரளீதரன் பதிலளித்து பேசினார். அதில் பாஸ்போர்ட்டில் தேவைப்படும் முக்கிய தகவல்கள் அனைத்தும் அதன் தரவுப் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் சிப்-ல் சேமிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக