கூகுள் தேடுபொறி தளத்தை பயன்படுத்தாவதர்களே இருக்க முடியாது என அடித்து கூறுமளவிற்கு பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இன்றைய நவீன காலத்தில் நம்முடைய தாத்தா, பாட்டிக்கள் கூட கூகுள் தேடுபொறி தளத்தை பயன்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது. அந்தளவிற்கு ஃபேமஸான ஒன்றாக கூகுள் தற்போது மாறியிருக்கின்றது.
இந்நிறுவனம் அதன் பணியாளர்களை அலுவலகத்திற்கு திரும்பி வர அழைப்பு விடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை கூகுள் அதன் பணியாளர்களுக்கு வழங்கி வந்தது. தற்போது வைரஸ் பரவல் குறைந்திருக்கின்ற காரணத்தினால் அதன் ஊழியர்களை அலுவலகத்திற்கு பணி செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஆகையால், அதன் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டும் நிறுவனத்திற்கு வந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையிலேயே அலுவலகத்திற்கு வந்து செல்லும் ஊழியர்களுக்கு மாதாந்திர சந்தா திட்டத்தின் அடிப்படையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்க நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊழியர்கள் தங்கு தடையின்றி அலுவலகம் வந்து செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை கூகுள் எடுத்திருக்கின்றது.
இதற்காக உனகி (Unagi) எனும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, கூகுள், ஊழியர்களுக்கு சந்தா திட்டத்தின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கப்பட இருக்கின்றது.
உனகி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றான தி மாடல் ஒன் (The Model One) எனப்படும் கிக் ரக ஸ்கூட்டரையே கூகுள் அதன் ஊழியர்களுக்கு வழங்க இருக்கின்றது. இந்த வாகனம் அமெரிக்க சந்தையில் இ500 மற்றும் இ350 என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் இ500 இரட்டை மோட்டார் தேர்வுடனும், இ350 ஒற்றை மோட்டார் தேர்வுடனும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இது 990 அமெரிக்க டாலர்கள் எனும் ஆரம்ப விலையில் இருந்து இவ்வாகனம் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 75 ஆயிரத்து 158 ஆகும். இத்தகைய அதிகபட்ச விலைக் கொண்ட வாகனத்தையே கூகுள் அதன் ஊழியர்களுக்கு வழங்க இருக்கின்றது. ஆரம்ப கட்டணமான 50 டாலர்களையும், மாத சந்தாவிற்கான கட்டணத்தில் 44.10 டாலர்களையும் கூகுளே செலுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சலுகையை பெறுவதற்கு மாதம் ஒன்பது நாட்களாவது அலுவலகத்திற்கு வருபவராக அதன் ஊழியர் இருக்க வேண்டும். அத்தகையோருக்கே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. உனகி மாடல் ஒன் கிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 32 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது
இது 1.3 எச்பி பவரையும், 32 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 72,000 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உயர்நிலை தேர்வு இ500 இன் விபரங்கள் ஆகும்.
இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த வாகனத்தை மடித்து வைத்துக் கொள்ளவும் முடியும். இத்துடன், பிரேக்கிங் வசதிக்காக இ-வாகனத்தில் எலெக்ட்ரானிக் பிரேக் இ-ஏபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், பராமரிப்பு தேவைப்படாத ரப்பர்கள் டயர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆகையால், பத்து நாட்களுக்கு ஒரு முறை இதன் டயர்களில் காற்றடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. இதுதவிர, 1.8 வாட் அதிக பிரைட்னஸ் திறன் கொண்ட எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் இ-வாகனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட உனகி மாடல் ஒன் இருக்கின்றது. கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் பே ஏரிய உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களை திறந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக