>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 11 ஏப்ரல், 2022

    மகாராணிக்கு திடீரென்று அலங்காரம்... மன்னருக்கு மாரடைப்பு... எதனால்?

    ------------------------------------------
    கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
    ------------------------------------------

    மந்திரி 1 : என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்?
    மந்திரி 2 : சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி 'மன்னா" என்று அழைக்காமல் 'அண்ணா" என்று அழைத்துவிட்டாராம்..!
    மந்திரி 1 : 😂😂

    மன்னன் : என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்?
    மந்திரி : மன்னா, 'பட்டத்து யானையை அலங்கரியுங்கள்" என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்..!
    மன்னன் : 😣😣
    ------------------------------------------
    என்ன உறவு?
    ------------------------------------------
    1. ஒரு ஆணை அறிமுகப்படுத்தி ஒரு பெண் கூறுகிறாள் 'அவர் யாரென்றால் எனது அம்மாவின் அம்மாவுடைய ஒரே மகன்" அந்த ஆணிற்கு பெண் என்ன உறவு?

    A) தாய் B) அத்தை C) சகோதரி D) உடன்பிறந்தோர் மகள்

    2. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுவதாவது 'நீ எனது தாயின் ஒரே மகனுடைய மனைவி" எனில் அந்த ஆணுக்கு பெண் என்ன உறவு?

    A) சகோதரி B) அத்தை C) மகள் D) மனைவி

    3. ஒரு பெண்ணைப் பார்த்து ஆண் கூறுகின்றான் 'அந்தப் பெண் யாரெனில் எனது தந்தையுடைய ஒரே மகனுடைய சகோதரி" அந்த ஆணின் தந்தைக்கு பெண் என்ன உறவு?

    A) மகள் B) மனைவி C) சகோதரி D) தாய்

    விடை :

    1. D) உடன்பிறந்தோர் மகள்

    2. D) மனைவி

    3. A) மகள்
    ------------------------------------------
    பழமை மொழிகள்...!!
    ------------------------------------------
    🌟 அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

    🌟 அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

    🌟 ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

    🌟 ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

    🌟 பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
    ------------------------------------------
    அட அப்படியா?
    ------------------------------------------
    யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவாக இருக்காது... வலது பக்கத் தந்தம் சற்று பெரிதாக இருக்கும். மரங்களைத் தூக்கவும், மண்ணைத் தோண்டவும் யானைகள் பயன்படுத்துவது வலது பக்கத் தந்தத்தைத்தான்!

    🐘 யானையின் காலடித் தடத்தின் குறுக்களவை 6ஆல் பெருக்கினால், அந்த யானையின் உயரம் தெரிந்துவிடும்!


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக