9 ஜன., 2021

வார்த்தை விளையாட்டு... வெற்றியாளர்களின் ஆயுதம் இதுதான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 


-------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------


ரமேஷ் : ஒரு கிலோ மீட்டர் தூரம் தானே என்னை டாக்டர் நடக்கச் சொன்னார்? 


சுரேஷ் : அதுக்கு இப்போ என்ன? 


ரமேஷ் : தவறுதலா ஒன்னே கால் கிலோ மீட்டர் நடந்துட்டேனே? 


சுரேஷ் : அதனால என்ன? கால் கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ்ல நடந்து வாக்கிங் போயிடுங்க. சரியாகிடும். 


ரமேஷ் : 😛😛

-------------------------------------


அமலா : ஏன் தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா? 


விமலா : ஏன்?


அமலா : கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!


விமலா : 😖😖

-------------------------------------


பொன்மொழிகள்...!!

-------------------------------------

தேதியை போல உங்கள் கவலைகளையும் கிழித்து எரிந்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கானதாக எண்ணி புதிதாய் வாழப் பழகுங்கள்.சிந்தனையும், செயலும், தெளிந்த அறிவும், திறமையும், கவனமும், வீரமும், விவேகமும் வெற்றியாளர்களின் ஆயுதம். வலிமையான கஷ்டங்கள் உங்களைத் தேடி வந்தாலும், அதைவிட வலிமையான உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்களோடு இருக்கிறது.இதற்கு ஈடானது எதுவுமில்லை. துணிவுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.-------------------------------------


வார்த்தை விளையாட்டு...!!

-------------------------------------

1. க் வ கு வு ப் தி ழ ப2. ளி நா க வெ ள் டு3. ட் ய சி வ ட ஆ மா ட் ர்4. ரி த சு ப சோ ய னை5. வ ள் ன் ல க த ர் னா ர்விடை :1. வழக்குப்பதிவு2. வெளிநாடுகள்3. மாவட்ட ஆட்சியர்4. சுயபரிசோதனை5. தன்னார்வலர்கள்

-------------------------------------


நாட்டுக் காய்கறிகள்...!!

-------------------------------------

கத்திரிக்காய் :கத்திரிக்காயில் 'பைட்டோநியூட்ரியன்ட்ஸ்" இருப்பதால், நினைவுத்திறனை அதிகரிக்கும்.


இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும்.


புற்றுநோய் வராமல் காக்கும்.


இதயநோய் வராமல் தடுப்பதுடன் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.கொத்தவரங்காய் :கெட்டக்கொழுப்பை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.


உடலில் ரத்த உற்பத்தியை சீராக்கும்.


உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலை தீர்க்கும்.

 


மன அழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.  


 


 

 

 

 

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக