Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 ஜனவரி, 2021

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எப்படி....?



பழங்களினால் ஃபேஷியல் செய்யும்போது பக்கவிளைவுகள் வராது என்ற நம்பிக்கை கிடைக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் நிறைய நன்மைகள் உண்டு. 



பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவுவதால், முகத் தோலில் உள்ள வறட்சி நீங்கி,  தோலின் முதுமைத் தன்மையைக் குறைக்கும். வாழைப் பழத்தின் தோல் மிகவும் நல்லது.


 


திராட்சைச் சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் நீங்கி, முகம் பளிச்சென்று ஆகும். 


 


வாழைப்பழத்தோலை ஒட்டியிருக்கும் சதைப்பகுதியுடன், 10 சொட்டு கிளிசரின், கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து தோலை அப்படியே முகத்தில் வைத்து தடவி 5  முதல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இந்த வாழைப்பழ ஃபேஷியல் இறந்த செல்களை நீக்கி, நிறத்தை அதிகப்படுத்தக் கூடியது.


 


அடுத்து ஸ்ட்ராபெர்ரியில் என்சைம்கள் அதிகம் உள்ளது. இவை இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் அரைத்து 10  சொட்டு தேன், மக்காச்சோள மாவு கலந்து முகத்தில் போடும்போது நல்ல பலன் கிடைக்கும்.


 


தர்ப்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டி வைத்து மசித்தால் கிடைக்கும் சாறு 10 மிலி, சாத்துக்குடி சாறு 10 மிலி,  இத்துடன் ஜவ்வரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் கழுத்திற்கு தடவினால் நல்ல பளபளப்பையும் கொடுக்கும்



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக