இதுநாள் வரை வெவ்வேறு நாடுகளில் தோன்றிய மர்ம உலோகத்தூண் தற்போது இந்தியாவில் தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த மர்மத்தூண் இந்தியாவில் உள்ள பூங்காவில் எப்படி வந்தது என்பதற்கு விளக்கமும் வெளிப்படையாத தெரியவந்துள்ளது.
மர்ம உலோகத்தூண் கண்டுபிடிப்பு
மூன்று பக்கங்களை கொண்ட மர்ம உலோகத்தூண் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தோன்றியது. அடுத்தடுத்து பல நாடுகளில் இதேபோன்று மோனோலித் எனப்படும் மர்மத்தூண் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏலியன்ஸ்களின் வேலையாக இருக்கலாம் என தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மத்தூண்
இந்த தூண்கள் குறித்த மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் மோனோலித் எனப்படும் மர்மத் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் உலோகத் தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தை அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் சிம்பனி லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
7 அடி உயரமுள்ள முக்கோணத்தூண்
இந்த தூண் சுமார் 7 அடி உயரமும், முக்கோண ப்ரிஸ் வடிவ அமைப்பும் கொண்டிருக்கிறது. ஆனால் பிற நாடுகளை போலவே இந்த தூணில் எந்த மர்ம விஷயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்த தூணை அங்கு வைத்தது அந்த பூங்காவை நிர்வகிக்கும் நிறுவனம்தான்.
பார்வையாளர்களை ஈர்க்க நடவடிக்கை
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்த பூங்காவை பாஜக மூத்த தலைவர் விஜய் ரூபானி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் தோன்றிய தூணை அதை நிர்வகிக்கும் நிறுவனம் தான் நிறுவியுள்ளது. சிம்பனி லிமிடெட் எனும் தனியார் நிறுவனம் தோட்டத்திற்கு அதிக பார்வையாளர்களை வரவைக்கவே இந்த தூண் நிறுவப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் வருகை அதிகரிப்பதாக தகவல்
தோட்டத்தை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனமான சிம்போனி கணித்தது போல் இந்த 7 அடி உயரத்தூணை காண பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் பளபளப்பான மேற்பரப்பில் பார்வையாளர்கள் தங்களின் பிரதிபலிப்பை காணலாம் எனவும் செல்பி எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001: A Space Odyssey என்ற திரைப்படம்
இந்த மோனோலித்கள் 2001: A Space Odyssey என்ற திரைப்படம் மற்றும் புத்தகத்தின் ரசிகர்களை நினைவூட்டுகின்றது. புத்தகத்திலும் படத்திலும் இதேபோன்ற கட்டமைப்பை நம்மால் பார்க்கமுடியும். இந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த மோனோலித் பற்றி தெரிந்திருக்கும்.
ஏலியன்ஸ் உடன் தொடர்புபடுத்தி வதந்திகள்
மற்றநாடுகளில் தோன்றிய இந்த மர்மத் தூணுக்கு பல வதந்திகள் பரப்பப்பட்டது. இதில் முக்கியமான ஒன்று இந்த மர்மத்தூணுக்கும் ஏலியன்ஸ்-க்கும் தொடர்பு படுத்தி பேசப்பட்டதாகும். இந்தநிலையில் இந்தியாவில் தோன்றிய தூணில் மர்மங்கள் ஏதுமில்லை என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக