Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 26 ஜனவரி, 2021

சுவை மிகுந்த பருப்பு உருண்டை குழப்பு செய்ய !!



  
தேவையான பொருட்கள்:
 
துவரம்பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
கறிவேப்பில - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
எலுமிச்சம்பழச் சாறு - 2 ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் மேற்குறிப்பிட்ட பருப்புகளை ஒன்றாக சேர்த்துக் கழுவி ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அவை நன்றாக ஊறிய பின் அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைக்க வேண்டும்.
 
ஆவியில் வெந்த அந்த உருண்டைகளை குழம்பில் போட்டு சிறிது நேரத்திற்குள் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்போது பருப்பு உருண்டை குழப்பு தயார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக