ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகியதாக பலரும் புகாரளித்து வருகின்றனர்.
உலகளவில் உள்ள ஐபோன் பயனர்கள் பலர், நேற்று மாலை தங்கள் பேஸ்புக்அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறதாக புகாரளித்து வருகின்றனர். பலர், re-login செய்து வருவதாகவும், two step verification முறையில் லாகின் செய்து பார்த்தும் வருகின்றனர். லாகின் ஆகாத நிலையில் பயனர்கள், பேஸ்புக்கின் இந்த பிரச்சனை குறித்து ட்விட்டரில் புகாரளித்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், “பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து ஆட்டோமெட்டிக்காக லாக்-அவுட் ஆகுகிறது, ஏன்?” என கேள்வியெழுப்பிக்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம், இந்த பிரச்னையை நாங்கள் அறிந்துள்ளதாகவும், பிரச்சனை குறித்து ஆராய்ந்து, விரைவில் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக