Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 26 ஜனவரி, 2021

மன அழுத்தம், இறுக்கம் அகல எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ!!



மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. நம் மனச்சோர்வை போக்கவல்ல எளிய உணவு முறைகளை இங்கே காணலாம்.


மன அழுத்தம், இறுக்கம், உடல் சோர்வு ஆகியவை இந்நாட்களில் பெரும்பாலும் அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளாக உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, இயற்கையான முறைகளில் இவற்றை சரி செய்து கொள்வதே நல்லதாகும். நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்களில் இதற்கான தீர்வு உள்ளது. நம் மனச்சோர்வை போக்கவல்ல எளிய உணவு முறைகளை இங்கே காணலாம்.


பிஸ்தா மனச் சோர்வை தகர்க்க உதவும்


பிஸ்தாவில் துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளன. இவை பதட்டமான நரம்புகளை அமைதிப்படுத்த உதவுகின்றன. இதன் காரணமாகத்தான் பெரும்பாலான மக்கள் பணியிடத்தில் பிஸ்தாவை வைத்துக்கொண்டு அவ்வப்போது உட்கொள்கிறார்கள். அதிக இறுக்கம் அல்லது அழுத்தத்தில் (Tension) இதை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


உங்கள் மூடை மாற்றும் டார்க் சாக்லேட்


சோர்வான மனநிலையை மேம்படுத்த சாக்லேட் சிறந்த வழியாகும். சாக்லேட் சாப்பிடுவது உடலில் எண்டோர்பின்களை உருவாக்குகிறது. இதன் காரணமாக மன அழுத்தம் நீக்கப்பட்டு நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு துண்டு டார்க் சாக்லேட்டை உட்கொண்டால், அது உற்சாகத்தை உண்டு பண்ணும்.


சிட்ரஸ் பழங்கள் மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாகும்


ஆரஞ்சு (Orange), சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதில் உள்ள மெக்னீசியம் காரணமாக, உடலில் உள்ள சோர்வு தளர்ந்து, தூக்கம் நன்றாக வரும்.




தயிர் உங்கள் உடலை சுறுசுறுப்பாக்கும்


தயிரில் இருக்கும் புரோபயாடிக்குகள் வயிற்றை வலுப்படுத்துவதன் மூலம் செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன. தயிர் உட்கொள்வதால் மூளைக்கு நேர்மறையான சமிக்ஞைகள் கிடைக்கின்றன. கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த தயிரை தினமும் உட்கொண்டால், மன அழுத்தம் கண்டிப்பாக குறையும்.


வாழைப்பழம் நமக்கு நாள் முழுவதற்குமான ஊக்கத்தை அளிக்கும்


வாழைப்பழங்களில் (Banana) உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது நமது இரத்த அழுத்தத்தை இயல்பாக்குகிறது. வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது. இது ஆற்றலை அதிகரிக்கும். உடல்நல வல்லுநர்கள் காலை உணவில் வாழைப்பழம் சாப்பிட பரிந்துரைக்க இதுவே காரணமாகும். இதனால் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்கிறது. நாள் முழுதும் வாழைப்பழம் நம்மை ஊக்கத்துடன் இருக்க வைக்கிறது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக