புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
மத்திய பட்ஜெட் 2021-22 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 'யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். புதிதாக தொடங்கப்பட்ட யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி சட்டமியற்றுபவர்கள், பொது மக்கள் என அனைவரும் எந்த வித தடையோ பிரச்சனையோ இல்லாமல், பட்ஜெட் ஆவணங்களை அணுக உதவும்.
இந்த பட்ஜெட் செயலியை, பொருளாதார விவகாரங்கள் துறையின் (DEA) வழிகாட்டுதலின் கீழ் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது.
2021 ஐ பிப்ரவரி 1, 2021 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்த பின்னர் பட்ஜெட் ஆவணங்கள் மொபைல் செயலியில் கிடைக்கும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை (Mobile App) ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும், iOS சாதனங்களில் (ஐபோன் மற்றும் ஐபாட்) உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். யூனியன் பட்ஜெட் வலைத்தளத்திலிருந்தும் இதை நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த பட்ஜெட் (Budget) செயலி பொது மக்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் என்பதை இங்கே காணலாம்:
-அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வருடாந்திர நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படுகிறது), மானியங்களுக்கான தேவை (டிஜி), நிதி மசோதா உள்ளிட்ட யூனியன் பட்ஜெட்டின் 14 ஆவணங்களையும் பயனர்கள் முழுமையாக அணுக இந்த செயலி உதவும்.
-இந்த இடைமுகத்தில் மொழிகளை தேர்வு செய்யலாம் - ஆங்கிலம் மற்றும் இந்தி.
- இந்த யூசர் ஃப்ரெண்ட்லி இடைமுகம், ஆவணங்களை பயனர்களை பதிவிறக்கம் செய்ய, அச்சிட, ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்ய (சிறிதாக்க, பெரிதாக்க) மற்றும் ஆவணத்தொகுப்பில் வேண்டியவற்றை தேட உதவும்.
-இந்த செயலி Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும்.
-பிப்ரவரி 1 ம் தேதி நிதியமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் செயலியின் பயனர்களுக்கு அனைத்து பட்ஜெட் ஆவணங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, மத்திய பட்ஜெட் 2021 முற்றிலும் காகிதமற்ற முறையில் இருக்கும். தற்போது இருக்கும் தொற்றுநோயின் காரணமாக, பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது.
பட்ஜெட் ஆவணங்களை அச்சிட, தொற்று அச்சத்திற்கு மத்தியில், சுமார் 100 பேர் சுமார் பதினைந்து நாட்கள் அச்சகத்தில் தங்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு நாடாளுன்றத்தின் இரு அவைகளும் மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக