
சாம்சங் நிறுவனம் வரும் பிப்ரவரி 2ம் தேதி தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் ரூ.6,000 முதல் ரூ.7,000 என்ற விலைப் பட்டியலின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம் 02 ஐ இந்தியாவில் பிப்ரவரி 2 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M02s போனின் மலிவான பதிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளம் வழியாகக் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் விலை என்ன இருக்கும்?
இதற்காக அமேசான் நிறுவனம் ஒரு பிரத்தியேக பக்கத்தையும் தனது வலைப்பக்கத்தில் அமைத்துள்ளது. இதில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ .6,000 முதல் ரூ .7,000 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அமேசான் பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன், 6.5' இன்ச் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவுடன் எச்டி பிளஸ் ரெசல்யூஷனுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M02 போனின் சிறப்பம்சம்
சாம்சங் கேலக்ஸி M02s போனின் சிறப்பம்சமும், சாம்சங் கேலக்ஸி M02 போனின் சிறப்பம்சம் ஒருவகையில் ஒன்று போல் இருக்குமென்று தான் கருதப்படுகிறது. குறிப்பாக இது சாம்சங் கேலக்ஸி M02s போனின் லோ வெர்ஷன் என்பதனால் சில சிறப்பம்சங்களில் மட்டும் வேறுபாடு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிப்செட் இல் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா விபரம்
சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் 1.80GHz கொண்ட அடிப்படை சக்தியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்ட்ராய்டு 10 அவுட்-ஆஃப்-பாக்ஸ் இயங்குதளத்துடன் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும். கேமராவை பொறுத்த வரை டூயல் பின்புற கேமராவாக 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் கேமரா மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக