Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 ஜனவரி, 2021

யார் இந்த Elon Musk? உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: வெற்றியின் ரகசியம் இதுதான்!

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் உச்சரிக்கும் வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்

டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

ஊக்குவிக்கும் வார்த்தைகளே பெரும்பாலும்

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, தற்போது ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

டெஸ்லா பங்கு விலை உயர்வு

கடந்த நவம்பர் மாதத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்ததையடுத்து அவரது சொத்து மதிப்பு உயர்ந்தது.

முதலிடத்தில் எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததையடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து இரண்டாம் இடத்திற்கு எலான் மஸ்க் முன்னேறினார். முதலிடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் இருந்தார்.

அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய மஸ்க்

இந்த நிலையில் டெஸ்லாவின் பங்கு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. கடந்தாண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 188.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோசைவிட 1.5 பில்லியன் டாலர் அதிகமாகும்.

எலான் மஸ்க் பட்டியலில் முதலிடம்

இதன்மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசை பின்னுக்குதள்ளி எலான்மஸ்க் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வரலாற்றை ஸ்கிரிப்ட் செய்துள்ளார்

ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு மோசான முடிவுகளின் காரணமாக டெஸ்லாவை விற்க முடிவு செய்த எலான் மஸ்க், அதே நிறுவனத்தை முன்னேற்றி தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசை பின்னுக்கு தள்ளிய எலான் மஸ்க் வரலாற்றை ஸ்கிரிப்ட் செய்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனவுத்திட்டத்தை நோக்கி அடுத்த கட்டம்

எலான் மஸ்க் தொடர்ந்து தனது கனவுத்திட்டங்களான உட்சபட்ச வேக ஹைப்பர் லூப் பயணம், அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்கள், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என அனைத்திலும் கவனம் செலுத்தி முன்னோக்கி செல்கிறார்.

மேற்கோள் காட்டப்பட்ட நம்பிக்கையுடன் என்ற வார்த்தை

இதுகுறித்து முன்னதாக எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட் குறித்து பார்ப்போம். அதில், இந்த முக்கிய மைல்கல்லை எட்டியதற்காக டெஸ்லா அணிக்கு மிகவும் பெருமை! டெஸ்லாவின் தொடக்கத்தில், நாங்கள் தப்பிப்பிழைக்க 10% வாய்ப்பு மட்டுமே இருப்பதாக நம்பினோம் (நம்பிக்கையுடன்)" என பதிவிட்டுள்ளார். நம்பிக்கையுடன் என்ற வார்த்தையே அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக