
செவ்வாயன்று தொழிலாளர் கட்சி மாநாட்டின் போது கிம் தொடக்க உரையை நிகழ்த்தியபோது, COVID-19 தொற்றுநோயின் விளைவாக பொருளாதாரம் சந்தித்த இழப்புகள் காரணமாக வட கொரியா “பெரும் சவால்களையும் சிரமங்களையும்” எதிர்கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டார்.
ஒரு அரிய வளர்ச்சியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது முந்தைய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படத் தவறிவிட்டதாகக் கூறி முதல் முறையாக தவறை ஒப்புக்கொண்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் தன் ஆளும் கட்சியின் முதல் முழு மாநாட்டைத் துவக்கியபோது கிம் இந்த தவறை ஒப்புக்கொண்டார்.
தன்னுடைய வினோதமான ஆட்சி முறைக்கு பிரபலமான கிம், ஒன்பது ஆண்டு ஆட்சியின் கடினமான தருணத்தை எதிர்கொள்கிறார் என்ற உண்மையை இந்த ஒப்புதல் எடுத்துக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
செவ்வாயன்று தொழிலாளர் கட்சி (Labour Party) மாநாட்டின் போது கிம் தொடக்க உரையை நிகழ்த்தியபோது, COVID-19 தொற்றுநோயின் விளைவாக பொருளாதாரம் சந்தித்த இழப்புகள் காரணமாக வட கொரியா “பெரும் சவால்களையும் சிரமங்களையும்” எதிர்கொண்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். பல இயற்கை பேரழிவுகள் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளும் நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதித்தன என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தின் படங்களை ஆளும் கட்சி செய்தித்தாள் வெளியிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை என்பதை படங்கள் காட்டுகின்றன.
கடந்த ஐந்தாண்டு பொருளாதார மேம்பாட்டு மூலோபாயத்தின் முடிவுகள், கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் நம் இலக்குகளை விட மிகக் குறைவாகவே இருந்துள்ளன என்று கிம் ஜாங் உன் (Kim Jong Un) கூறினார்.
"இதைப் பற்றி ஆழமாக விரிவாக பகுப்பாய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம் ... நமது அனுபவங்கள், படிப்பினைகள் மற்றும் நாம் செய்த பிழைகள் அனைத்தையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று கிம் மேலும் கூறினார்.
வட கொரியாவில் (North Korea) ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் கட்சியின் உயர் முடிவெடுக்கும் அமைப்பு காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வட கொரியா உலகளவில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும்.
கிம் தொழிலாளர் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் அவர் தேர்ந்தெடுத்த சில அதிகாரிகளுடன் சேர்ந்து அன்றாட முக்கிய முடிவுகளை அவரே தீர்மானிக்கிறார். புதிய கொள்கைகளை உருவாக்குதல், கடந்த கால திட்டங்களின் மதிப்புரைகள், கட்சி விதிமுறைகளின் திருத்தங்கள் மற்றும் பிற முக்கிய முடிவுகளுக்கு காங்கிரஸ் பொறுப்பாகும்.
தொழிலாளர் கட்சியின் முதல் மாநாட்டை கிம்மின் தாத்தா கிம் இல் சுங் 1945 இல் நடத்தினார். கிம் இல் சுங் 1994 இல் இறப்பதற்கு முன்பு ஆறு மாநாடுகளை நடத்தினார். அவரது மகனும் கிம்மின் தந்தையுமான கிம் ஜாங் இல் எந்தவொரு காங்கிரஸ் மாநாட்டையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிம் ஜாங் உன் வட கொரியாவின் பொருளாதார நிலை பற்றி ஒப்புக்கொண்டுள்ளது ஒரு அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நாடு வறுமையின் விளிம்பில் இருக்கும் இந்த நிலையில், மற்ற நாடுகளில் பொருளாதாரத் தடைகளை தவிர்க்க அவர் உண்மை நிலையை ஒப்புக்கொண்டிருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக