சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ்
சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட மூன்று கேமராக்களுடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்02 எஸ் விலை
சாம்சங் கேலக்ஸி எம்02 எஸ் விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை 15,999 என்பிஆர் இந்திய மதிப்பின்படி ரூ.9,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்நாட்டு ஆன்லைன் தளங்களில் வாங்கக் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் ஜனவரி 7 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு கிடைக்கிறது. மேலும் இதில் 6.5 அங்குல டிஎஃப்டி வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
13 மெகாபிக்சல் முதன்மை கேமரா
சாம்சங் கேலக்ஸி எம்02 எஸ் ஸ்மார்ட்போனானது அட்ரினோ 506 ஜிபியுடன் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோகோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ் 5000 எம்ஏஎச் பேட்டரி 15 வாட்ஸ் சார்ஜ் வசதி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக