Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 ஜனவரி, 2021

தாத்தா பட்டிகளுக்கான ஸ்மார்ட்போன் பிரத்தியேகமாக அறிமுகம்.. எங்கே தெரியுமா?

கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

நம் அனைவருக்கும் ஆப்பிள் ஐபோன் தெரிந்திருக்கும், பிளாக்பெர்ரி போன் தெரிந்திருக்கும், ஆண்ட்ராய்டு போன்கள் பற்றி நன்றாகவே நமக்கெல்லாம் தெரிந்திருக்கும். கிராண்ட்ராய்டு என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் பற்றி உங்களுக்கு தெரியுமா? எது கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போனா அப்படியென்றால் என்ன என்று தானே இப்போது உங்களுடைய கேள்வி? வாருங்கள் புதிய கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பது ஒரு வகையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தான். ஆனால், என்ன இது வயதானவர்களுக்காகப் பிரத்தியேகமான சில அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஸ்மார்ட்போன்களை இப்போது இளைஞர்களும், சிறியவர்களும் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பெரியவர்களுக்கு அதிக அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை பார்த்தால் சற்று பயமாகத் தான் இருக்கிறது.

வயதானவர்களை மிரள வைக்கும் ஸ்மார்ட்போன்கள்

உண்மையில் புதிய ஸ்மார்ட்போன்கள் வயதானவர்களை மிரள வைத்துவிடுகிறது. இதன் காரணமாகப் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் வயதானவர்களுக்கான பிரத்தியேக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஆம்ப்லிகாம்ஸ் பவர் டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய போனை தான் நிறுவனம் கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்று அழைக்கிறது.

மிகவும் சத்தமாக ஒலிக்கும் ரிங்டோன்

வழக்கமான ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ரிங்டோன் போல் அல்லாமல் இந்த போனில் ரிங்க்டோனின் ஒலி மிகவும் அதிகமாக ஒலிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் எளிதில் புரிந்து பயன்படுத்தும் விதத்தில் மெனு வசதிகள் குழப்பம் இல்லாமல் எளிமையான UI மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் எழுத்துக்கள் கூட அளவில் பெரிதாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெயரைப் படித்துக் காட்டும் வசதி

அதேபோல், கிராண்ட்ராய்டு போனின் பின் பக்கத்தில் அவசரக் கால தொடர்புக்கென்று ஒரு பிரத்தியேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. கிராண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழைப்புகள் வரும் பொழுது அந்த காலர் ஐடி போன் எண் மற்றும் பெயரைப் படித்துக் காட்டும் வசதி கூட இதில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் போன்றே இதில் பல அம்சங்களும் உள்ளது. வயதானவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த போன் ஆன்லைன் மூலம் விற்பனைக்குக் கிடைக்கிறது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக