---------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------------
மனைவி : ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க....
கணவன் : சொர்க்கத்துக்குதான்..
மனைவி : அப்போ, நாங்க...
கணவன் : அத வேற தனியா சொல்லணுமா? நரகத்துக்கு தான்...
மனைவி : அதுக்கப்புறம் அங்க என்னங்க ஆவும்?
கணவன் : அதுவா எங்களுக்கு அழகிகள் கிடைப்பாங்க... உங்களுக்கு குரங்குகள் தான்...
மனைவி : என்ன கொடுமை பாருங்க!! உங்களுக்கு இரண்டு இடத்திலேயும் அழகிகள் கிடைக்குது. எங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....
கணவன் : 😖😖
---------------------------------------------------------
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நாம் அறிந்த விளக்கம் :
நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும் என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.
விளக்கம் :
இங்கு சூடு எனும் சொல் சுவடு என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது கால் பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
---------------------------------------------------------
இது சிரிப்பதற்கு மட்டுமே...!!
---------------------------------------------------------
கல்லறையின் முன்னால் ஒருவன். 'நீ செத்திருக்கவே கூடாது. நீ செத்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா? என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?" என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்.
அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப்பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார்.
அவனருகே வந்த அவர் 'இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.
'இல்லை" என்றான் அவன்.
'மகனா?" என்று கேட்டார் அவர்.
'இல்லை" என்றான் அவன்.
வியப்படைந்த அவர், 'இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை, மகனும் இல்லை என்கிறாய். எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.
'இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் அவன்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக