Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

ஸ்மார்ட்போனே போதும்: இந்த 10 விதிமுறைகள் தெரிந்தால் நீங்க புகைப்பட கலைஞர்தான்- நச்சுனு ஒரு கிளிக்!

ஒளி கவனித்தல் மிக முக்கியம்

நமக்கு பிடித்த காட்சியையும், தருணத்தையும் புகைப்படமாக சாதனத்தில் பதிவு செய்யும் பழக்கம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. புகைப்படம் பதிவு செய்வதற்கு எந்தநேரமும் நம் கையோடு ஒட்டியிருக்கும் ஸ்மார்ட்போனே போதுமானது. பெரிய பெரிய கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுக்கலாம் என்றாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலேயே சிறந்த முறையில் புகைப்படம் எடுப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

புகைப்படம் எடுப்பதற்கு மிக முக்கியமான ஒன்று ஒளி. ஒளி எந்தளவு வருகிறது, எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். போதுமான வெளிச்சம் இல்லாமல் இருந்தால் புகைப்படம் பார்ப்பதற்கே சலிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். புகைப்படத்திற்கு இயற்கை ஒளி மிக சிறந்தது. சூரியன் உதிக்கும் சமயத்திலும், மறையும் சமயத்திலும் கிடைக்கும் ஒளி புகைப்படத்தை மிக அழகாக மாற்றும்.

மூன்றாம் விதி என்பது புகைப்படம் எடுப்பதில் முக்கியமான விதி. இந்த விதி பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. பத்திரிக்கைகளில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் இதன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். டிஸ்ப்ளேவை இரண்டாகவும், கீழ் ஒரு பகுதியாகவும் பிரித்து அதில் சரியாக ஒருபகுதியில் பொருளை நிலைநிறுத்தி எடுக்கலாம்.

கேமரா பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று. பொதுவாக புகைப்பட கலைஞர்கள் எப்போதும் தங்களது பையில் கேமரா சுத்தம் செய்யும் பொருட்களை வைத்திருப்பார்கள். புகைப்பட கலைஞர்கள் தங்களது லென்ஸ் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து விடுகிறார்கள் என்றால் ஸ்மார்ட்போனில் கேமராவை எப்படி பராமரிப்பு செய்வது. உங்கள் ஸ்மார்ட்போன் கேமராவையும் எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். செல்போனை கீழே வைக்கும்போது டிஸ்ப்ளே பகுதி கீழே வைக்கக்கூடாது என அனைவரும் செல்போனை பின்புறமாகவே கீழே வைக்கின்றனர். இதனால் கேமரா கண்ணாடி ஸ்கார்ட்ச் ஆகிவிடும் எனவே அவ்வப்போது கேமரா பகுதியை சுத்தம் செய்து பாதுகாப்பாக கையாள வேண்டும்.

மேலும் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கும்போது சாதனம் பிடித்திருக்கும் கை ஷேக் செய்யாமல் இருக்க வேண்டும். இது மிக முக்கியமான ஒன்று. எனவே கையை கவனமாக வைத்து ஷேக் பண்ணாமல் புகைப்படத்தை நிதானமாக பதிவு செய்ய வேண்டும். அல்லது ட்ரைபாட் போன்றவற்றை பயன்படுத்தி புகைப்படத்தை நிலையாக பதிவு செய்யலாம்.

சிறந்த போட்டோ ஷூட் காட்சியை கண்டவுடன் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்கலாம், புகைப்படம் எடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று, புகைப்படம் எடுக்கும்போது தேவையான படங்கள் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஏதாவது சிறந்தவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

6. எடுக்கும் புகைப்படம் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தில் மையப் பொருள் என்று ஏதாவது இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு சூரிய அஸ்தமனத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் சூரிய அஸ்தமனம் என்பது அனைவரும் பார்க்கும் ஒன்றுதான், எனவே சூரிய அஸ்தமனத்தை புகைப்படமாக பதிவு செய்யும்போது கூடுதலாக ஒரு பறவை பறக்கும் சமயம், படகு போன்றவற்றை இணைத்து காட்சியாக பதிவு செய்ய வேண்டும்.

கேமரா பிற அம்சங்களை பயன்படுத்தி பழகுங்கள். பிற அம்சங்களை பயன்படுத்தும் போது அதற்கு தேவையான சூழ்நிலையை அறிந்து புகைப்படம் எடுக்கலாம். அனைத்து ஸ்மார்ட்போன்களில் பல விருப்பங்கள் இருக்கிறது. உருவப்படம், மேக்ரோ முறைகள், எச்டிஆர் அம்சம், பனோரமா பயன்முறை என பல விருப்பம் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் கேமரா மேம்பாட்டு பயன்முறை என்ற பயன்பாடை பயன்படுத்தலாம். உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ற அம்சத்தை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தலாம். கேமரா தொடர்பான அனைத்து பயன்பாடுகளையும் பயன்படுத்தி அனுபவிக்கலாம்.

எடுக்கும் புகைப்படத்தை எடிட் செய்வது என்பது ஒரு சிறந்த விஷயம். புகைப்படம் எடிட் செய்வதன் மூலம் அழகாக உருவாக்கலாம். அடாப்பின் தொழில்முறை எடிட்டிங் லைட்ரூம், போட்டோஷாப் போன்ற பயன்பாடுகள் இதற்காகவே கிடைக்கின்றன.தேவையான அளவு எடிட்டிங் செய்து புகைப்படத்தை அழகாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக