22 பிப்., 2021

ரூ.8499-க்கு Narzo 30A; ரூ.15999-க்கு Narzo 30 Pro; எதிர்பார்த்ததை விட கம்மி விலை?

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் நெருங்கிவிட்டதையடுத்து இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயமும் லீக் ஆகியுள்ளன.ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பட்ஸ் ஏர் 2 ஆகியவைகளை வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலைப்பாட்டில், இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக, நார்சோ 30 தொடரின் விலை நிர்ணயம் ஒரு இந்திய டிப்ஸ்டரால் வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ஸ்டர் Debayan Roy மற்றும் Techbloat வழியாக வெளியான லீக்ஸ் தகவலின்படி, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வரும் - 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆகும்.

அவற்றின் விலை முறையே ரூ.17,999 அல்லது ரூ.18,999 மற்றும் ரூ.15,999 அல்லது ரூ.16,999 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஸ்வார்ட் பிளாக் மற்றும் சில்வர் போன்ற இரண்டு வண்ணங்களில் வரும்.

மறுகையில் நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகைகளில் வரும் என்றும் வெளியான லீக்ஸ் தகவல் கூறுகிறது.

இந்த இரண்டு மாடல்களின் விலை முறையே ரூ.9,999 அல்லது ரூ.9,499 மற்றும் ரூ.8,999 அல்லது ரூ.8,499 இருக்கலாம். இது லேசர் பிளாக் மற்றும் லேசர் ப்ளூ போன்ற இரண்டு வண்ணங்களில் வரும்.

விலை நிர்ணயங்கள் லீக் ஆன கையோடு, ரியல்மி நார்சோ 30A ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் கீக்பெஞ்ச் பட்டியல் வழியாக மாடல் நம்பர் RMX3171-இன் கீழ் கசிந்துள்ளன.

கிடைக்கப்பெற்ற கீக்பெஞ்ச் பட்டியலின்படி, இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 ஆக்டா கோர் SoC (1.8GHz) கொண்டு இயங்கும் மற்றும் இந்த சிப்செட் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும்.

மேலும், ரியல்மி நார்சோ 30A ஸ்மார்ட்போன் ஆனது சற்றே பழைய ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்குகிறது என்றும் வெளியான பட்டியல் தெரிவிக்கிறது. ஆனாலும் இது ஆண்ட்ராய்டு 11 உடனாக ரியல்மி யுஐ 2.0 உடன் வரும் என்றே நம்பலாம்.

கீக்பெஞ்ச் பட்டியலில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டில் 368 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 1,296 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5G ஸ்மார்ட்போனின் லீக் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:


வெளியான லீக்ஸ் தகவல்களைப் பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.

இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்களை, சதுர வடிவிலான கேமரா அமைப்புடன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் நார்சோ 30 ப்ரோ 5 ஜி ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்பதை ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் ஷெத் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியை 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

தவிர இது டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவை ஆதரிக்கலாம் என்றும் குறிக்கப்படுகிறது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடருடன் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்