Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 பிப்ரவரி, 2021

Bitcoin.. தங்கத்திற்கு மாற்றாகுமா? தொடர்ந்து புதிய உச்சம்.. பின்னணி என்ன?

 சிறந்த ஆப்சன்

சமீப மாதங்களாகவே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வரும் மற்றொரு சந்தேகம், இனி தங்கத்தினை போலவே பிட்காயினும் இருக்குமா? அல்லது தங்கத்தினை பிட்காயின் ஓரங்கட்டுமா? என்பது தான்.

ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கத்தினை விட, பலமடங்கு ஏற்றத்தில் பிட்காயின் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் பிட்காயினை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதனால் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றது. ஆக வரும் காலத்தில் தங்கம் பாதுகாப்பு புகலிடமாக இருக்குமா? அல்லது பிட்காயினா? எது லாபகரமானதாக இருக்கும் என்பது தான் உலக முதலீட்டாளர்களின் கேள்வியாக உள்ளது.

சிறந்த ஆப்சன்

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் சர்வதேச நிறுவனங்களின் சந்தை மதிப்பினை விட, இன்று இதன் மதிப்பு 1 டிரில்லியன் டாலரையும் தாண்டி விட்டது. பிட்காயின் மதிப்பும் வரலாறு காணாத அளவை தொடர்ந்து தொட்டு வருகின்றது. இந்த நிலையில் பலரும் தற்போது தங்களது போர்ட்போலியோவில் தங்கத்திற்கு பதிலாக, பணவீக்கத்திற்கு எதிராக கிரிப்டோகரன்சிகள் சிறந்த ஆப்சனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

பிட்காயின் ஒரு புதிய தங்கம்

PMS fund- ன் தலைவர் பசந்த் மகேஸ்வரி, அடுத்த சில தசாப்தங்களில் தங்கத்திற்கு மாற்றாக பிட்காயின் மாறுவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். இதே கேப்பிட்டல் மைன்ட் நிறுவனத்தின் தலைவர் தீபக் ஷெனாய், கிரிப்டோகரன்சியை ஆதரித்துள்ளார். இது ஒரு பயனுள்ள சொத்து வகுப்பு, இந்தியாவில் பிட்காயின் தடையை நான் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். எனினும் அதனை கணிசமான அளவு கட்டுப்படுத்துவதை தவிர்க்க முடியாது. என்ன தான் முயற்சி செய்தாலும் அது நாணயமாக சாத்தியமில்லை. எனினும் இது ஒரு வகையான அசெட் என்று கூறியுள்ளார்.

பிட்காயின் தாக்கம்

இதே மற்றொரு தரப்பினர் பிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம். இதனால் தான் இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நிஜ கரன்சிகளை விட இவை பலம் வாய்ந்தவை. ஆனால் குறுகிய காலத்தில் பெரிய விலை ஏற்ற இறக்கங்களை காணலாம். இதனால் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு முதலீடாக இருக்கலாம். எனினும் சிறு முதலீட்டாளர்களுக்கு இது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

பிட்காயின் $57,492

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு $57,492 டாலர்களை தொட்டுள்ளது. சமீபத்தில் பிட்காயினில் முதலீடு செய்த டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அவ்வப்போது இது குறித்த கருத்துக்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிட்காயின் மதிப்பு தற்போது உயர்ந்ததாக தெரிகிறது என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக