கேடிஎம் ட்யூக் 125 பைக்கை அடிப்படையாக கொண்ட 2021 ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கை பற்றிய விபரங்கள் படங்களுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இனி பார்ப்போம்.
ஹஸ்க்வர்னா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களிலேயே விலை குறைவானதாக விளங்கவுள்ள புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக் தோற்றத்தில் கிட்டத்தட்ட பெரிய என்ஜினை கொண்ட ஹஸ்க்வர்னா பைக்குகளிலேயே ஒத்து காணப்படுகிறது.
புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கும் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இங்கு தயார்க்கப்படும் ஸ்வார்ட்பிளேன் 125 பைக்குகள் தான் ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
இதனாலும், ஹஸ்க்வர்னா பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாலும் புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக் கூடிய சீக்கிரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். ஏற்கனவே கூறியதுபோல் இந்த 125சிசி பைக் பெரும்பான்மையான பாடி பேனல்களை இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஸ்வார்ட்பிளேன் 250 பைக்கில் இருந்து பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஸ்வார்ட்பிளேன் 250 பைக்கில் வழங்கப்படும் நீளம் அதிகரிக்கப்பட்ட ஹேண்டில்பார், க்னாப்பி டயர்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவற்றை புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கிலும் ஹஸ்க்வர்னா நிறுவனம் வழங்கியுள்ளது.
ஆனால் அலாய் சக்கரங்களுக்கு பதிலாக ஸ்போக் சக்கரங்களே இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பைக்கில் சஸ்பென்ஷன் பணியை கவனிக்க முன்பக்கத்தில் 43மிமீ அபெக்ஸ் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோடு-அட்ஜெஸ்டபிள் அபெக்ஸ் ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவை இரண்டும் 142மிமீ ட்ராவல் உடன் உள்ளன. கேடிஎம் 125 ட்யூக்கில் வழங்கப்படும் அதே 125சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் புதிய ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது.
6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-ல் 14.3 பிஎச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 12 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
நமது இந்திய சந்தையை பொறுத்தவரையில் புதிய ஸ்வார்ட்பிளேன் 125 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.1.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும் கேடிஎம் 125 ட்யூக்கை காட்டிலும் சில ஆயிரங்கள் குறைவாகவே நிர்ணயிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக