Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி!

 

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்ட போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக MLA-கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

தமிழக சட்டசபையில் விதி 110-யின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.,  "கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி (Agricultural loan) செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 16.13 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். 

Tamil Nadu Government waives Rs 12110 cores loan of farmers from cooperative banks.

— ANI (@ANI) February 5, 2021

முதல்வரின் இந்த அறிவிப்பினால், வங்கியில் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழக அரசு (TN Govt) பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. DMK-வினர் தேர்தலின் போது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி AIADMK தான் என்று முதல்வர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக